Breaking News
recent

கற்சிலையும் இனிய வாழ்வும்..



மிகப் பெரியதாய் உயர்ந்து நிற்கிற பாறை என்பது மலை, அதை ஒரு துண்டாக வெட்டி எடுத்ததும் கருங்கல், அதை உளியால் தேவையில்லாதவைகளை உடைத்து சிதைத்தால் கிடைப்பது சிலை.



ஒரு கரும்பாறையானது மலையாக இருந்தாலோ, கல்லாக இருந்தாலோ, சிலையாக இருந்தாலோ அந்த பாறையை பொறுத்தவரை எவ்வித வேறுபாடும் இல்லை பார்க்கும் நாம்தான் அதை மலையென்றும் சிலையென்றும் வேறுபடுத்திக் கொள்கிறோம்.

அவ்வாறே வாழ்க்கையும் ஆகும்., வாழ்க்கையென்பது நாம் வாழ்வதற்கான அழகு வாழ்க்கைதான் இதில் வெற்றி தோல்வியோ, தீயது நல்லதோ, ஏற்றம் இறக்கமோ, துக்கம் மகிழ்ச்சியோ எதுவாயினும் எல்லாம் நம்முடைய பார்வையாலயே பிரிக்கப்படுகின்றது. 

வாழ்க்கையை கருங்கல்லாக பார்ப்பதும் கலை கொண்ட சிலையாக பார்ப்பதும் நம் மனமே.. கருங்கல்லில் எவ்வாறு அதீத உழைப்பினையும் ரசணையையும் செலுத்தினால் சிற்பமாக ஜொலிக்குமோ அவ்வாறே நாமும் நம்வாழ்க்கையை ரசணை மிகுந்த சிற்பமாக்கிக் கொள்வோம்.. 


---------------------------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன் ..

No comments:

Powered by Blogger.