Breaking News
recent

ஆறும் வாழ்க்கையும், கடலும் மரணமும்..



மலையின் உச்சியில் ஊற்று எடுத்து அருவியாய் விழுந்து ஆறாய் ஓடி கடலில் கலக்கிறது ஆறு. 

ஆற்றின் பாதையை நம்முடைய வாழ்க்கை காலம் அப்படின்னு எடுத்துக் கொள்வோம் அதில் ஓடுகின்ற நீர் நாம் வாழும் வாழ்க்கை என எடுத்துக் கொள்வோம்.. 


ஆற்றின் நீரானது எப்படி மலை உச்சியில் ஊற்றெடுத்து பின்பு அருவியாய் விழுந்து கல் முள் பாறை என நிறைய தடைகளை மீறி கடலில் கலக்கிறதோ அதேபோலவே நாம் வாழ்நாளில் பிறந்து துன்பன் இன்பம் போராட்டம் வெற்றி தோல்வி என யாவற்றையும் கடந்து நதி கடலில் கலப்பதுபோல நாம் மரணத்துடன் கலந்துவிடுகிறோம்..

ஆற்றின் நீர் ஆற்றில் எத்தனை தடைகள் வந்தாலும் நில்லாது தன்னுடைய பாதையில் கடைலை நோக்கி சென்று கொண்டேதான் இருக்கும் வாழ்க்கையும் அப்படித்தான் எது நடந்தாலும் வாழ்க்கை யாருக்காகவும் எதற்காகவும் தாமதிப்பதில்லை மரணத்தை நோக்கி சென்று கொண்டேதான் இருக்கிறது..

ஆறு கடலில் கலக்கும் முன் தன் பாதையில் உள்ள நிலங்களை தோப்புகள், வயல்வெளிகள் என தன்னால் இயன்றவரை பசுமையாக ஆக்கி விடுகிறது. அது போல நாமும் மரணிக்கும் முன் நம்மாள் இயன்றவரை பிறரை மகிழ்ச்சி படுத்திவிட்டு அவர்களுக்கு பயனளித்துவிட்டு மரணத்துடன் கலந்துவிடுவோம்...

-----------------------------------------------------
மரணத்தை நோக்கி இசையன்பன்

No comments:

Powered by Blogger.