18 February 2011

அந்த நாள், இனிய நாள்............

Posted in
 
ரு பிப்ரவரி மாதம், 20ம் தேதி. அந்த நாள் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தன்போக்குத் தனமாக வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு ஒரு பிடிப்பு ஏற்படுத்தி விட்டது என்று கூட சொல்லிவிடலாம், நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான் என்று கூவுவது போல, இனிமேல் நானும் மனிதன்தான், நானும் மனிதன்தான் என கூவலாம் என்று சான்றிதழ் கொடுக்கப்பட்ட நாள்.

னிதனின் வாழ்க்கை காலத்தின் துணையுடன், ஒரு ஜெட் விமானம் போல மிகவும் விரைவாக போய்க்கொண்டு இருக்கிறது, வானத்தில் அது விட்டுச் செல்கிற புகைக் கோடுகள் சில நேரம் இருந்து வானத்தோடு வானமாக கரைந்து மறைந்து விடுவது போலத்தான் நமது வாழ்வும், அவற்றின் நினைவுகளும், நிகழ்வுகளும். ஆனால் அதைப் புகைப்படமாக எடுத்து மன்துக்குள் சேமித்து வைத்துக்கொண்டால் அதை திரும்பப் பார்த்துக் கொள்ளலாம், திரும்பியும் பார்த்துக் கொள்ளலாம்...

(ஏன் இத்துணை பீடிகை எனக் கேட்கிறீர்கள் அப்படித்தானே? அதாவது சொல்ல வந்த விசயத்தை உடனே சொல்லிவிட்டால் ஒரு சுவாரஸ்யம் இருக்காதல்லவா அதுக்குத்தான்….. கொஞ்சம் படிங்க தெரிஞ்சுக்கலாம்..ஹிஹி)

நிமிடத்திற்கு நிமிடம் காலம் வேகமாகப் போய் கொண்டு இருக்கிறது, நேற்றைய நேரங்கள் ஒரு மாதிரி கழிந்தது என்றால், இன்றைய பொழுது சில மாதிரி கழிகிறது, நாளை ஏதோ மாதிரி கழியத்தான் போகிறது. ஆக காலமும், நேரமும் எவ்வளவு விரைவாக கழிகிறது என்பதை சற்று யோசித்தாலே, பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

பாருங்கள்! ஏதோ நேற்று நடந்தது போலத்தான் இருந்தது, அது நடந்து முடிந்து வருடங்கள் சில ஓடிவிட்டன, நிமிடத்திற்கு நிமிடம் நாம் வாழ்க்கையின் எல்லை நோக்கி விரைவாக ஓடிக் கொண்டு இருக்கிறோம் என்பதை நம் வாழ்வில் (ந)கடந்து விட்ட நிகழ்வுகளை ஏதோவொரு காரணத்திற்காக அசைபோடும் போதுதான் புரிகிறது.

புதிய விதமான பார்வைகள், வரவேற்புகள், வாழ்த்துக்கள், பரிவுகள், பரிசுகள், பாசங்கள், மகிழ்வுகள், நிகழ்வுகள், தன்மேலேயே விழும் அனைத்து கண்கள் என எதையும் மனதை விட்டு அகலச் செய்ய முடியா நாள் அதுவாக இருந்தது.
 
 
ன்றைய நாளின் நாடகத்தில் நான்தான் கதாநாயகன் (சில பேருக்கு நகைச்சுவை நடிகன்) அந்த நாடகத்தில் துணைக் கதாபாத்திரமாக ஒருசிலபேர் இருந்தாலும், முக்கியமான கதாபாத்திரங்கள் இரண்டு பேர், ஒன்று கதாநாகன் அதாவது ”காஜாமைதீன்” என்கிற நான் மற்றொன்று, ”மைதீன்பாத்திமா” என்கிற ஒரு புதிய பெண் கதாநாயகியாக.

ம்..... காலையிலிருந்து மாலை வரை இனிதே நடந்தேரியது நாடகம், இதற்கு பெருவாரியான கூட்டம் பார்வையாளர்களாய் வந்து சிறப்பித்து இருந்தனர். நாடகக் குழுவினர் சார்பாக அவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. வந்திருந்த எல்லோர்க்கும் மகிழ்ச்சிதான், கதாநாயகனான எனக்கும், கதாநாயகியான அந்தப் பெண்ணிற்கும் கூட மகிழ்ச்சி.

ன்றைய மகிழ்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும், காதலுக்கும் எல்லையென்பது வரையறுக்க இயலாதது. 
 

ப்படி நடந்த அந்த நிகழ்ச்சி மட்டும் அன்று முடிந்தது. ஆனால் அந்த நாயகன், நாயகி பாத்திரம்(பந்தம்) மட்டும் முடிந்து விடவில்லை, மாறாக அது ஒரு மிகப் பெரிய வாழ்வியல் தொடக்கமாக அமைந்தது. ஆம்! அது வெறும் மேடை நாடக வேசமில்லை., அந்த நாடகம் என்பது நடந்த நேரம் முதல், இறப்பு வரை கூடவே வரக்கூடிய வாழ்க்கையெனும் நாடகம். அதுதான் நானும், என்னுடைய மனைவியும் சேர்ந்து புதிய வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கக் காரணமாய் இருந்த எங்களுடைய திருமணம்..

தை நாடகமெனச் சொன்னதில் தப்பில்லைதான் என நினைக்கிறேன் காரணம் மனிதனுடைய வாழ்வினில் நாமெல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் வேறு வேறுமாதிரியான கதாபாத்திரங்களாக நடித்துக்கொண்டுதானே இருக்கிறோம், கணவனிடம் – மனைவியாக, மனைவிடம் – கணவனாக, பெற்றோர்களிடம் – குழந்தையாக, குழந்தைகளிடம் – பெற்றோராக, மற்றும் ஆசிரியாக, மாணவனாக, நோயாளியாக, மருத்துவராக, வாடிக்கையாளராக அப்படி இப்படி என நம் நடிப்பு நீண்டு தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது, அதனால்தான் அதற்கு நாடகமெனச் சொன்னேன்., என்ன உண்மைதானே?

ருடங்கள் சிலவானாலும், பலவானாலும் நெஞ்சைவிட்டு அகலாத, அகற்ற முடியாதது திருமணநாள், அந்த நாளின் நிகழ்வினை ஒவ்வொருவரும் நினைவில் அசை போடும் போது சிலிர்ப்பில் மயிர்கூர்ச் செரியத்தான் செய்யும். அப்படியான எனது திருமணநாள் இந்த மாதம் (பிப்ரவரி) 20ம் தேதி., 
 


 
என் நினைவில் நான் அது நடந்த அதே தினத்தின்  நிகழ்வுகளை நினைத்தபடி............காதல் கீதம் இசைத்தபடி....... 
 
 
டிஸ்கி: இது எங்களுடைய 8வது திருமண ஆண்டு  நிறைவுற்று 9வது  ஆண்டின் தொடக்கம்.....
------------------------------------------
உங்கள் அன்பு -  இசையன்பன்..
http://www.kannniyam.blogspot.com
 
படித்துவிட்டு சும்மா போயிடாதீங்க உங்களின் கருத்துக்களை சொல்லிவிட்டு அப்படியே ஒரு ஓட்டும் போட்டுட்டு போங்க சரியா...


9 comments :

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் சகோ..!! வாழ்வில் எல்லா நலன்களும் தொடர்ந்து வர பிராத்தனையுடன் ..!! :-)

அன்புடன் > ஜெய்லானி <

ஜெய்லானி said...

இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் சகோ..!! வாழ்வில் எல்லா நலன்களும் தொடர்ந்து வர பிராத்தனையுடன் ..!! :-)

மிக்க நன்றி சகோ. மாஷா அல்லாஹ்

கண்களும் ஒளியும் போல்
கவின்மலர் வாசம் போல்
நெஞ்சமும் நினைவும் போல்
நேசத்தால் இணைந்து வாழ்க!!
நெடிது நாள் வாழ்க வாழ்க!!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோ...
அன்புடன்
ஆதிரா.

நாளைக்கு என்ன ஸ்பெஷல் சகோ? எங்களுக்கெல்லாம் டிரீட் உண்டா?

Anonymous said...

"எல்லாம் வல்ல அல்லாஹு என்றும் உங்களுக்கு துணை இருப்பர்" இனி வரும் நாட்களும் உங்களுக்கு இனிய நாளாக வர இறைவனை பிரார்த்திக்கிறேன்....

கண்களும் ஒளியும் போல்
கவின்மலர் வாசம் போல்
நெஞ்சமும் நினைவும் போல்
நேசத்தால் இணைந்து வாழ்க!!
நெடிது நாள் வாழ்க வாழ்க!!
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோ...
அன்புடன்
ஆதிரா./////

நன்றி சகோ. மிகவும் சந்தோஷம்.

(இன்னைக்காவது வந்து எட்டிப்பாத்தீங்களே ரொம்ப சந்தோஷம். இத தம்பி ரொம்ப கஷடப்படுறேன்)

Anonymous said...

"எல்லாம் வல்ல அல்லாஹு என்றும் உங்களுக்கு துணை இருப்பர்" இனி வரும் நாட்களும் உங்களுக்கு இனிய நாளாக வர இறைவனை பிரார்த்திக்கிறேன்....

மிக்க நன்றி தோழரே! மிக்க நன்றி!!

ஒரு நாள் அரங்கேற்றம்
ஒவ்வொறு வருட புதுப்பித்தல்
ஒன்றாய் இனைந்த மனத்திற்கு
ஒவ்வொரு நாளும் வாழ்த்துக்கள்.

Arul Mozhi said...

ஒரு நாள் அரங்கேற்றம்
ஒவ்வொறு வருட புதுப்பித்தல்
ஒன்றாய் இனைந்த மனத்திற்கு
ஒவ்வொரு நாளும் வாழ்த்துக்கள்.


வாழ்த்திய தினமும் வாழ்த்திக்கொண்டிருக்கிற அன்பு சகோதரி அருள்மொழி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..