29 January 2011

துகிலுரிந்தால் உயர்விருது தாய்தமிழ் நாட்டினிலே

ஏன் இப்படி தலைப்பு அதானே உண்மைதான் ”டம்மில் டிரைஉலக்கில்” சி(தி)றந்த சேவை புரிந்தமைக்காக சி(தி)றந்த நடிகை தமன்னாவிற்கும் சி(தி)றந்த நடிகை அனுஷ்காவிற்கும் கலைமாமணி! விருது. அரசு அறிவிப்பு.
(எனக்கு இந்த செய்தியை கேட்டதும் இதயமே நின்று விட்டது)
 

 
படத்த பார்த்துட்டு சகோதரிகள் யாரும் தப்பா நெனைக்காதீங்க 
இவங்க அதிகபட்சமா இழுத்து போர்த்தியதே இவ்வளவுதான்
 
 
 
””தமிழகத்தில் முதன்முறையாக”” இந்த அவலட்சணம். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் "கலைமாமணி" எனும் மாநில அளவிலான விருதினை வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது
 
மேற்படியாளர்கள் இந்த விருதை வாங்க தகுதியானவர்கள் தானா? அப்படி என்ன கலைத் தெண்டாற்றி விட்டார்கள் அனுஷ்காவும், தமன்னாவும்., தன்னுடைய முக்கால் நிர்வாணத்தை தமிழக மக்களுக்கு விருந்தாக்கினார்கள், விருந்தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள், இந்த தகுதிதானா கலைமாமணி விருதுக்கு உகந்தது.? இதுல நடிகர் ஆர்யாக்கு வேற கலைமாமணியாம். (ஆமாங்க சமீபத்துல தமிழ் திரைஉலகை மட்டம் தட்டி தனது மாநில திரை விழாவில் பேசினார்ல அவரேதான்..)
 
தனது வாழ்வாதாரத்தையும் பொருட்படுத்தாமல் கலைக்காக சேவை செய்பவர்களை தேடி தேடி (சில பேருக்கு சிபாரிசின் காரணமாக! அதுகூட பரவாயில்ல) அவர்களை பெருமைபடுத்தும் விதமாக அளிக்கப்பட்ட உயரிய விருது, இன்று இவர்களுக்கு, ”என்ன கொடும சார் இது.”

அனேகமாக வரும் வருடங்களில் நடிகை ஷகீலாவிற்கும் கிடைத்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை. அய்யோ அய்யோ
 
இதுவரை கலைமாமணி விருது வைத்திருப்போரையும் சரி, வருங்காலத்தில் கலைமாமணிக்கு நிஜ தகுதியாளர்களையும் சரி நம்ம தமிழக அரசு! வெட்கப்பட வைத்து விட்டது.
 
வெட்கமே இல்லாத அனுஷ்கா, தமன்னாவிடம் உள்ள கலைமாமணி என்னிடமும் இருக்கிறது இருக்கிறது என்பதில் நிச்சயமாக ”உண்மைக் கலைஞனுக்கு” வெட்கம்தான். (அது நம்ம கலைஞருக்கு! இல்லை போகட்டும் விடுங்க)
 
இந்த கேடுகெட்ட நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறதாம்.. 
 
சென்னைவாசிகள் தவற விட்டுடாதிங்க ஏன்னா, உலக வரலாற்றிலேயே முதன் முறையாக இப்படி ஒரு மட்டமான நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
 
கேட்குறவன் கேனையனா இருந்தால் கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்லுறவன் சொல்லுவானாம்.
 

பல்லு இருக்கிறவன் பக்கோடா திண்கிறான்..
 
காறி துப்புறதுன்னா வெளியே போய் துப்பிட்டு வாங்க கம்ப்யூட்டர்ல துப்பிறாதீங்க!!! 
 
 ----------------------------------------------------------------------------------
2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்   
2. பேராசிரியர் தே. - ஞான சேகரன் இயற்றமிழ்   
3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்   
4. டாக்டர் தமிழண்ணல் -  இயற்றமிழ்   
5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்   
6. சொ. சத்தியசீலன் - சமயச் சொற்பொழிவாளர்   
7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்   
8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்   
9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்   
10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்   
11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்   
12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்   
13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்   
14. ராஜேஷ்  வைத்யா - வீணைக் கலைஞர்   
15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல் 
16. கே.வி. இராமானுஜம் - புல்லாங்குழல்   
17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் - தேவார இசைக் கலைஞர்   
18. கல்யாணி மேனன் - மெல்லிசைப் பாடகி   
19. திருக்கடையூர் முரளிதரன் - நாதஸ்வரக் கலைஞர்   
20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்   
21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்   
22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்   
23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்   
24. ஆர்யா - திரைப்பட நடிகர்   
25. அனுஷ்கா - திரைப்பட நடிகை   
26. தமன்னா - திரைப்பட நடிகை 


இந்த விருதுகள் வழங்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலையில் நடைபெறும்.  மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சின்னத்திரை விருதுகளும் - பாரதி விருது, எம்.எஸ். சுப்புலட்சுமி விருது, பாலசரஸ்வதி விருது ஆகியவைகளும் வழங்கப்படும். முதல்வர் கருணாநிதி இந்த விருதுகளை யெல்லாம் வழங்கி சிறப்பிப்பார்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(செய்திக்குறிப்பு விகடன் நன்றி விகடன்)

---------இசையன்பன்-----------
 http://www.kannniyam.blogspot.com

6 comments :

//நிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறுகிறதாம்.. சென்னைவாசிகள் தவற விட்டுடாதிங்க//

என்ன ஒரு ஒற்றுமை.

//அனேகமாக வரும் வருடங்களில் நடிகை ஷகீலாவிற்கும் கிடைத்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.//

தெய்வமே....என் மனசுல ரொம்ப நாளா இருந்த பாரத்தை இன்னைக்கி வெளியே இறக்கி வச்சிட்டீங்க .....

ஜெய்லானி: என் மனசுல ரொம்ப நாளா இருந்த பாரத்தை இன்னைக்கி வெளியே இறக்கி வச்சிட்டீங்க////

ஹா ஹா இப்போதான் தெரியுது அனுஷ்காவிற்கு யாரு சிபாரிசு பண்ணினதுன்னு...

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

//தெய்வமே....என் மனசுல ரொம்ப நாளா இருந்த பாரத்தை இன்னைக்கி வெளியே இறக்கி வச்சிட்டீங்க //

என்னாதிது
பிச்சுபுடுவேன் பிச்சி இது
மச்சி சொல்லச்சொன்னிச்ச்சீஈஈஈஈஈஈஈஈஇ

தாங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_06.html

மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்
அக்கா நான் நெனைச்சே பார்க்கல, மி்க்க சந்தோஷம்...

////தெய்வமே....என் மனசுல ரொம்ப நாளா இருந்த பாரத்தை இன்னைக்கி வெளியே இறக்கி வச்சிட்டீங்க //

என்னாதிது
பிச்சுபுடுவேன் பிச்சி இது
மச்சி சொல்லச்சொன்னிச்ச்சீஈஈஈஈஈஈஈஈஇ//

ஆஹா... பப்லீக்கை மறந்து போய் உலறிட்டேனே ...அப்புரம் வீட்டில முதுகில டின் கட்டிடப்போறாங்க (( நா என்னைய சொன்னேன் )) அவ்வ்வ்வ்வ்