Breaking News
recent

கேலிப் பேச்சு, அழிஞ்சுப் போச்சு..




பழைய நெனப்புடா பங்காளி பழைய நெனப்புடா
----------------------------------------------------------------

கிராமப்புறங்களில் முறைவச்சு கேலிபண்றது அப்படிங்கறது எல்லாரும் ஏற்றுக் கொண்ட ஒரு அங்கிகாரமான ஒரு நடைமுறை... வயக்காட்டுல வேலை செய்யும் போதும், வீட்டுல காட்டுல வேலை செய்யும் போதும் அலுப்பு தெரியாது இருக்க மகிழ்சியாக சந்தோஷமாக ஆடிப்பாடி கேலி கிண்டல் பண்ணிகிட்டு வேலை பார்ப்பாங்க. ஆனாலும் அது வரம்பு தாண்டாமல் எதார்த்தமாக கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது உண்மை. 


மதனி, கொழுந்தியா, மச்சான் மச்சினன் கேலிபண்ணறதுங்கறது நம்ம பாரம்பரிய மரபு, அதனால் பந்தங்கள் இன்னும் வலுபெற்றது ஆனால் அது இப்பொது நகர வாழ்க்கையால் தொலைந்து விட்டது..

நாம முறைப்பொண்ணுங்கள கேலி பண்ணினா சில நேரம் அவங்க உடனே ஓடிப் போய் பெருசுங்ககிட்ட ஆவலாதி (கம்ப்ளைண்ட்) சொன்னா உடனே பெருசுங்க ஏய் போடி வந்துட்டா மச்சான் காரன்னா கேலி பண்ணத்தான் செய்வான் முடிஞ்சா நீ பதிலுக்கு பதில் குடுட்டீ அப்படின்னு சொல்லுடுங்க
  .. (பின்ன இவளுக வந்து பஞ்சர் ஆக்கிடுவாங்க என்பது சொல்லவும் வேண்டுமா என்ன 
 )

மாவன் மவளுவ, மதனி, அப்புறம் மதினியோட தங்கச்சுங்க இதெல்லாம் நமக்குன்னே நேந்து விட்டுருப்பாங்க எப்ப எப்பலாம் போர் அடிக்குமோ அப்பலாம் கோலியும் கிண்டலும்தான் ஹிஹிஹிஹி (ஆனா திருப்பியும் செமயா பல்பு கிடைக்கும் )) ((இதுல மஞ்ச தண்ணி ஊத்தி விளையாடறது, கொஞ்சம் பட்டும் படாம அடிச்சு விளையாடறது, எசப்பாட்டு பாடி விளையாடறது கொஞ்சம் ஹைலைட் ))

அதேமாதிரி பக்கத்து வீடுகளிலும் முறை சொல்லி கூப்பிடற பழக்கம் இருக்கும் (இப்ப உள்ள வாழ்க்கையில பக்கத்துவீட்டுல எவன் இருக்கான் அப்படின்னே தெரிய மாட்டேங்குது) அவங்களையும் நமக்குன்னுதான் நேந்து விட்டுருப்பாங்க.

அப்போ செல்போன் இல்ல, டிவியின் ஆதிக்கம் குறைவா இருந்துச்சு, திரைப்படங்கள் கூட நல்ல விதமா வந்து எல்லாருக்கும் மன நிறைவு இருந்துச்சு, முக்கியமா பொண்டாட்டி மேல, புருஷன் மேல, புள்ளைங்க மேல எல்லாம் நம்பிக்கை இருந்துச்சு, எல்லாரும் நல்ல அன்பா பாசமா, மனிதத்தன்மையோட ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தனர்.
ஆனா இப்ப மனிதன் கல்லாகவும், இயந்திரமாகவும் மாறிட்டான்..
------------------------------------------------------------------
நினைவுகளுடன் இசையன்பன்   

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்போ எங்கே...?

தனி தனி தனிக்குடித்தனம்...!

Unknown said...

இழந்த மகிழ்ச்சிப் பூக்கள்... :(

Powered by Blogger.