09 February 2011

வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4 பாகம் 2

Posted in

அன்பும், பண்பும், பொருமையும்!! நிறைந்த பாசத்திற்குறிய நண்பர்களே!  
வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4 பாகம் 1 என்ற பதிவின் தொடராக இன்றிலிருந்து கோரல்டிராவினில் வேலை செய்வது எப்படி என ஆழமாக கற்றுக்கொள்ளப் போகிறோம்.
அதற்கு முன்  
அன்பார்த்த நண்பர்களே! வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4  தொடர் பதிவு கொஞ்சம் தாமதமானதற்கு மன்னிக்கவும், ஏனென்றால் தங்களுக்கு விளக்கமாகவும் தெளிவாகவும், தெரிவிக்கவேண்டி அதற்காக நிறைய படங்களும் தயார் செய்ய வேண்டி இருந்த்து மற்றும் சற்று கூடுதல் வேலை பளுவின் காரணமாயும் தாமதமேற்பட்டு விட்டது தயவு செய்து மன்னித்து விடுங்கள்.
---------------------------

சரி! இப்போது கோரல்டிராவினை பார்ப்போம்.
போன பதிவில் போட்டேஷாப்பினையும், கோரல்டிராவினையும் சற்று ஒப்பிட்டு பார்த்தோம். அது தாங்கள் கோரலின் அம்சங்களை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.
அதை கருத்தில் வைத்து தொடருவோம். முதலில் கோரல்டிராவினை நிறுவி (அல்லது நிறுவியதை) திறக்கும் போது வெல்கம் ஸ்கிரீன் வரும் அதன் படம் கீழே கொடுத்திருக்கிறேன்.

 வெல்கம் ஸ்கிரீன்.


 இந்த திரை வந்ததைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டிது இதுதான். அதில் நமக்குக் கீழ்கண்டவாறு தேர்வினை செய்யலாம். அதன் விளக்கம் கீழே தந்திருக்கிறேன். ஆனால் நாம் தற்சமயம் தேர்வு செய்ய வேண்டியது (போவது) புதிய பக்கத்திற்கான தேர்வு. அதை கீழே பார்க்கவும். (படங்களை அதனுள் கிளிக்கி பெரியாதாக்கி காண்க)வெல்கம் ஸ்கிரீன் உறுப்பு விளக்கத்துடன்.


நாம் New Blank Document என்பதனை தேர்வு செய்தாகி விட்டதா. அதன் பின் தற்பொழுது கோரல்டிரா முழுமையாக திறந்து ஒரு திரையில் வந்து நிற்கும் அதுதான் Workspace நாம் வேலை செய்யப்போகும் இடம். அதன் படத்தினை கீழே காண்க.


கோரல் டிரா வொர்க் ஸ்பேஸ் மற்றும் தோற்ற அமைப்பு
 

இதுதான் Workspace இதில் காணப்படும் தற்போது தேவைப்படும் முக்கியமான உறுப்பின் பெயர்களை, கீழே உள்ள படத்தில் குறி(யிட்டு)ப்பிட்டு காட்டிருக்கிறேன். 


கோரல் டிரா வொர்க் ஸ்பேஸ் மற்றும் தோற்ற அமைப்பு

இதை நன்றாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள் அடுத்த பதிவில் இங்கே குறிப்பிட்ட பக்க உறுப்புகளுக்கு தனித்தனியே விளக்கம் காணலாம்.. அதன் பிறகு கருவிகளை (Tools) பற்றி தெரிந்து கொண்டு நேரடியாக டிசைனிங்கிற்கு போய்விடலாம்.

தாங்கள் போன பதிவில் எனக்கு தந்த ஊக்கம், கருத்துகளுக்கு நன்றி தயவுசெய்து. தங்களுடைய கருத்துகளை பதியுங்கள் அப்போதுதான் தொடர் மேம்படுத்த வசதியாக இருக்கும்... 

தொடருவேன் ”இன்ஷா அல்லாஹ்”
படைப்பு : இசையன்பன் @ காஜா மைதீன்


அன்பர்களுக்காக நினைவுகூறுகிறேன் இந்த படைப்புகள் என்னுடைய சொந்த அனுபவம், முயற்சி, தயவு செய்து இதை நீங்கள் இதை நகலெடுத்து உங்களின் வலையிலோ அல்லது வேறு எங்கிலுமோ பதியவோ, அச்சாக்கவோ, கூடாது நிச்சயமாக இது கடுங்குற்றமாகும். இந்த படைப்புகள் பதிப்பு காப்புரிமை சட்டப்படி பதிவுசெய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கிறேன்.

இந்த தொடரின் சம்பந்தமாக தங்களுக்கு ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக கேட்கலாம். உங்கள் சந்தேகங்களை, தங்கள் கருத்துக்களுடன் பதிவு செய்யலாம்.

9 comments :

This comment has been removed by the author.

தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகுப்பாக அமையும் .
எனக்கும் கோரல் டிரா முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களின் இந்த நன் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

//இந்த தொடரின் சம்பந்தமாக தங்களுக்கு ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக கேட்கலாம்.//

இதை எத்தனை எபிஸோடில முடிக்க முடியும்...நீங்க தொடர்ந்து போடும் பட்சத்தில :-))

///தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகுப்பாக அமையும் .
எனக்கும் கோரல் டிரா முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களின் இந்த நன் முயற்சிக்கு பாராட்டுக்கள்./////

நன்றி திரு. கக்கு - மாணிக்கம் அவர்களே! தங்களின் ஆதவிற்கு மிக்க நன்றி தொடர்ந்திருங்கள்.. தொடருவோம்...

///இதை எத்தனை எபிஸோடில முடிக்க முடியும்...நீங்க தொடர்ந்து போடும் பட்சத்தில :-))///

///நீங்க தொடர்ந்து போடும் பட்சத்தில :-))////

தல ஒங்க கடம ஒணர்சிக்கு அளவே இல்ல மாட்டிவுடுறதுலேயே இருக்கிறீங்கோ--சரி சொல்றேன்..

கிட்டத்தட்ட 12+1 எபிசோடு போடலாம்னு வச்சிருக்கேன் தல.
3 வது பாகத்தில் பொதுவான சில மெனுக்களையும், சில விளக்கங்களையும் பார்ப்போம், 4வது பாகத்தில் அனைத்து டூல்ஸ்களையும் பார்ப்போம். பிறகு 5வது பாகத்திலிருந்து நேரடியாக டிசைனிங் செய்ய போய்விடலாம் அதில் அப்பப்ப தேவைப்படும் மெனுக்களை அங்காக்கே படிக்கப் போறோம்..இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)

//தல ஒங்க கடம ஒணர்சிக்கு அளவே இல்ல மாட்டிவுடுறதுலேயே இருக்கிறீங்கோ ///

நான் ஆத்தில இறங்கினாலும் அடி ஆழம் பார்க்காம இருப்பதில்லை.....இப்போ நீங்க மறந்தாலும் விட்டுடுவோமா ஹா..ஹா..

ஜெய்லானி said...
///நான் ஆத்தில இறங்கினாலும் அடி ஆழம் பார்க்காம இருப்பதில்லை.....இப்போ நீங்க மறந்தாலும் விட்டுடுவோமா ஹா..ஹா..///

எப்படியெல்லாம் யோசனை பண்றாங்க!!! தல ரெண்டு எபிசோடு ஏற்கனவே போட்டாச்சி கழிக்க மறந்துடாதீங்க.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்....

murugan said...

கோரல்டிரா பற்றிய பதிவு வந்துள்ளது என்று ஆவலாக படித்தோம்.இடைவெளி விழுந்துவிட்டது. தொடர்ந்து எழுதவும்.பதிவு அருமையாக இருந்தது.நன்றி

இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
முகவரி : www.valikatie.blogspot.in