மன்னவனே....! (நித்யஸ்ரீ)
முத்து முத்தாய் உன் நினைவுகள்
முத்தாய்ப்பாய் என் கனவினிலே...!
முத்தாய் என் வியர்வையிலே
முத்தாய்க்கும் உன் வாசனை...!
நித்தம் நிலவாய் தோன்றி
என்னை கொள்ளை கொள்பவனே...!
சத்தம் இல்லாமல் முத்தம் தந்து
யுத்தம் செய்து என்னை வெல்பவனே....!
விடியலில் எல்லாம் உன் முகம்
பார்த்தே மலர காத்திருந்தேன்...!
காத்திருந்த மலர் முகம் காண
காலைச் சூரியனாய் ஓடோடி வந்தாய்...!
---------------------------------------------------------------------------------------------------
காதலுடன்
நித்யா...
-------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
No comments:
Post a Comment