Breaking News
recent

சுகமாய் உறங்கு. (நித்யஸ்ரீ)



இரவை உனக்காய் பரிசளித்தேன்
நீ சுகமாய் உறங்கிட

கனவை உனக்காய் பரிசளித்தேன்
கனவிலும் நானுனை களவு கொண்டிட


விடியலை உனக்காய் பரிசளித்தேன்
விடியலிலும் என் முகம் பார்த்து நீ மலர்ந்திட

அந்திப்பொழுதை உனக்காய் பரிசளித்தேன்
அந்தி வேளையிலும் எனை உன் மடிதனில் சாய்த்திட

உனக்காய் பரிசளித்த இரவும் வந்தது
இமையிரண்டும் தழுவும் நேரமிது

அன்பே சுகமாய் உறங்கிடு – இதோ
கனவில் உனை களவு கொள்ள வருகிறேன்..

-----------------------------------------------------------------------
காதலுடன்
நித்யா............

No comments:

Powered by Blogger.