Home
கவிதைகள்
நட்புகளின் படைப்புகள்
நித்யஸ்ரீ கவிதைகள்
நினைவெல்லாம் நித்யா
பொம்மைப் பூக்கள்.. (நித்யஸ்ரீ)
பொம்மைப் பூக்கள்.. (நித்யஸ்ரீ)
மனிதப் பிறவியிலேயே நீங்களோர்
உன்னத பிறவியம்மா
மனித முகமணிந்து மிருககுணம் கொண்டு
வாழும் மனிதர்களிடையே
ஆணாக உருவெடுத்து பெண்ணாக
வாழும் தெய்வப் பிறவியம்மா…
தண்ணீரை விடுத்து பாலை பருகும்
அன்னப்பறவைப் போல்
பலமனிதர்கள் பேசும் தீய சொல்தனை
கேலி செயல்தனை மறந்தும் துறந்தும்
வாழும் பிறவியம்மா…
உலகில் சாதிக்க பிறந்தவர்கள் நாங்களென்று
இன்று பல துறைகளில் முன்னேறி இருக்கும்
உங்களைக் கண்டு பாரே வியந்து பார்க்குதம்மா...
உங்கள் பாதையில் நீங்கள் கண்டதோ
எத்தனை விஷச் செடிகள்
அத்தனையும் முறித்து வெற்றிகள் பலகண்டு
வாழும் பிறவியம்மா...
பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒருமுறைதான்
அதனிடையே எத்தனையோ
துன்பங்கள் வந்தாலும் துவண்டு மடியாமல்
இமயமாய் எழுந்திடம்மா...
காலையில் மலர்ந்து மாலையில் வாடும்
மலராய் அல்லாமல் காண்பவர் மனம்கவரும்
காகிதப் பூக்களாய் – இனிவரும்
காலங்களில் வாழ்வு மலரட்டுமம்மா...
-------------------------------------------------------------
அன்புடன் உங்கள் நினைவெல்லாம் நித்யா.....
--------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
மனிதப் பிறவியிலேயே நீங்களோர்
உன்னத பிறவியம்மா
மனித முகமணிந்து மிருககுணம் கொண்டு
வாழும் மனிதர்களிடையே
ஆணாக உருவெடுத்து பெண்ணாக
வாழும் தெய்வப் பிறவியம்மா…
தண்ணீரை விடுத்து பாலை பருகும்
அன்னப்பறவைப் போல்
பலமனிதர்கள் பேசும் தீய சொல்தனை
கேலி செயல்தனை மறந்தும் துறந்தும்
வாழும் பிறவியம்மா…
உலகில் சாதிக்க பிறந்தவர்கள் நாங்களென்று
இன்று பல துறைகளில் முன்னேறி இருக்கும்
உங்களைக் கண்டு பாரே வியந்து பார்க்குதம்மா...
உங்கள் பாதையில் நீங்கள் கண்டதோ
எத்தனை விஷச் செடிகள்
அத்தனையும் முறித்து வெற்றிகள் பலகண்டு
வாழும் பிறவியம்மா...
பிறப்பும் இறப்பும் வாழ்வில் ஒருமுறைதான்
அதனிடையே எத்தனையோ
துன்பங்கள் வந்தாலும் துவண்டு மடியாமல்
இமயமாய் எழுந்திடம்மா...
காலையில் மலர்ந்து மாலையில் வாடும்
மலராய் அல்லாமல் காண்பவர் மனம்கவரும்
காகிதப் பூக்களாய் – இனிவரும்
காலங்களில் வாழ்வு மலரட்டுமம்மா...
-------------------------------------------------------------
அன்புடன் உங்கள் நினைவெல்லாம் நித்யா.....
--------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
பொம்மைப் பூக்கள்.. (நித்யஸ்ரீ)
Reviewed by Nithya Sri
on
Monday, February 27, 2012
Rating: 5

No comments:
Post a Comment