உருகும் நிழல். (நித்யஸ்ரீ)
ஏதோ சொல்லிச் சென்றான் - அவன்
என்னிதயத்தில் காதல் என்ற மூன்றெழுத்தில்...
இன்றும் என்னை ரணமாய்க்
கொல்கிறது அவனின் நினைவுகள்..... ?
உன்னைப் பார்த்ததும் பூத்தது
என்னில் காதல் என்றான் அவன்
இன்று அவனின்றி நான் - பூக்காமலே
இருப்பதை ஏனோ அவன் அறிய வில்லை .....?
நீரின்றி மீனோ ...?
நீயின்றி நானோ ...?
என்றான் அவன் ...
இன்று
நீரின்றி துடிக்கும் மீனாய்
அவனினின்றி வாடிப் போனேன் நானும்
ஓடியாடிக் காதல் கொண்ட கள்வனின்
வருகையை எண்ணி
விழிகள் தேடி ஈரமானதை
அவன் அறிவானா ...?
தேடித் தேடி ஓடி வந்தவன் - நான்
நாடி வாடி நிற்பதனை அறிவானா ...
அத்தனையும் அறிந்தும்
அவனின் வருகை மட்டும்
நிஜமின்றி வாடும்
நிழலாய்ப் போனதே ...?
-----------------------------------------------------------------------------------------
அன்புடன் உங்கள் நினைவெல்லாம் நித்யா....
--------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
ஏதோ சொல்லிச் சென்றான் - அவன்
என்னிதயத்தில் காதல் என்ற மூன்றெழுத்தில்...
இன்றும் என்னை ரணமாய்க்
கொல்கிறது அவனின் நினைவுகள்..... ?
உன்னைப் பார்த்ததும் பூத்தது
என்னில் காதல் என்றான் அவன்
இன்று அவனின்றி நான் - பூக்காமலே
இருப்பதை ஏனோ அவன் அறிய வில்லை .....?
நீரின்றி மீனோ ...?
நீயின்றி நானோ ...?
என்றான் அவன் ...
இன்று
நீரின்றி துடிக்கும் மீனாய்
அவனினின்றி வாடிப் போனேன் நானும்
ஓடியாடிக் காதல் கொண்ட கள்வனின்
வருகையை எண்ணி
விழிகள் தேடி ஈரமானதை
அவன் அறிவானா ...?
தேடித் தேடி ஓடி வந்தவன் - நான்
நாடி வாடி நிற்பதனை அறிவானா ...
அத்தனையும் அறிந்தும்
அவனின் வருகை மட்டும்
நிஜமின்றி வாடும்
நிழலாய்ப் போனதே ...?
-----------------------------------------------------------------------------------------
அன்புடன் உங்கள் நினைவெல்லாம் நித்யா....
--------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்ததும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை தெரியப்படுத்தவும் அது எங்களை நிச்சயம் மேன்படுத்த உதவும்... நன்றி..
உருகும் நிழல். (நித்யஸ்ரீ)
Reviewed by Nithya Sri
on
Thursday, February 23, 2012
Rating: 5
Reviewed by Nithya Sri
on
Thursday, February 23, 2012
Rating: 5


3 comments:
யாருன்னு கேட்கலாமுன்னு வந்தேன் ...ஹி..ஹி...ஆனா கேட்க மாட்டேனே ...!! :-))
அழகான காதல் கவிதை :-)
யாரோ கோரல் டிரான்னு ஆரம்பிச்சாங்க பாஸ்... அதுக்கு பிறகு அந்த ஆளையே கானோம் ...!! எதுக்கும் 999க்கு போன் போடவா ..?? !!! :-)))
நன்றி ஜெய்லானி ,,, கவிதை யாருக்காகவும் எழுத பட்டது அல்ல தோழி..... அனைத்தும் கற்பனையே தங்கள் வாழ்த்தில் மிகவும் அகம் மகிழ்ந்தேன்,,,
Post a Comment