Wednesday, May 21 2025

மாராப்பு சரிகிறது.....





வெண்பஞ்சு மேகக்குடையின் கீழ்
தென்றல் தேவதைகள் சாமரம் வீச
பசுமை வர்ணப் பட்டுப் போர்த்தி


சுகமாய் உறங்கி கிடக்கும் மலைமகள்
மார்பினூடே நழுவிய மாராப்பாய்
துள்ளி விழுகிறது வெள்ளி அருவி


சுகமான சப்தத்துடன் கற்கள் மீது
மோகம் கொண்டு காதல் செய்ய
கீழே பாய்கிறது ஆர்ப்பாட்டத்துடன்


ஆனந்த சயனத்தில் இருக்கும் கன்னியே.!
கதிர் உன் மேனியை வெளிச்சம் போடும் முன்
எழுந்து காத்திடு,  மேலாடை போர்த்திடு


இதோ மேலாடையில்லா உன் அழகைக் காண
சந்திரன் வந்துகொண்டு இருக்கிறான்
திருட்டுத்தனமாக..

--------------------------------------------------------
-------உங்கள் அன்பு இசையன்பன்---------

No comments:

Powered by Blogger.