காதல் தேடி...
மஞ்சத்தில் கதிர் உறங்கும் நேரத்தின்
மஞ்சள் பூசி மிளிரும் வானம்
மேனியைத் தழுவும் தென்றல்
மோகமூட்டும் பச்சைப் புல் வெளி
சிறகு விரித்து பறக்கும் பட்டாம்பூச்சி
சலசல ஒலியோடு கடந்து போகும் நீரோடை
சடையென வேர்கள் விழும் பிரம்மாண்ட ஆலமரம்
சங்கீதமாக வரும் குயில்களின் கீதம்
இவைகளுக்கு இடையே ஒரு பயணம்
உன்னைத்தேடியும் உன் காதலை நாடியும்
நானறிவேன் உன் முகம் பார்க்கும் நேரம்
இவையனைத்தும் ஒன்றுமே இல்லை என்பதை
ஆயினும் ரசிக்கிறேன் பயணிக்கும் நேரத்தில்
அழகாய் காற்றில் ஆடும் ஒற்றை ரோஜா
அம்சமாய் கிளி அமர்ந்த மரக்கிளை
என தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்…
------------------------------------------------------------
--------உங்கள் அன்பு இசையன்பன்------------
No comments:
Post a Comment