Sunday, April 27 2025

நீ எங்கே



காற்றாய் மூச்சாய் துடிப்பாய் என் இதயத்தில் நீ
காற்றும் மூச்சும் துடிப்பும் இருந்தும் உனக்குள் எங்கே நான்

மனம் திறந்து மடை திறந்தேனே கவியாய்
மறப்பாய் என நினைக்க மறந்தேனே தவறாய்

கொத்து கொத்தாய் காதல் சொன்ன காலம் எங்கே
குலைவு கொண்ட காதல் கொண்டு நானும் இங்கே

காதல் காலம் கானல் நீராய் ஆனதோ
காலன் வென்ற காதல் என்றே ஆகுமோ

மறைந்தாலும் உனை நினைக்க நான் மறவேன்
மறுத்தாலும் உன் நினைவில் நான் கரைவேன்



--------------உங்கள் இசையன்பன்----------------------

4 comments:

ஆமினா said...

அழகு அழகு அழகு

வேறென்ன சொல்ல????? துயரத்தையும் அழகிய வரிகளால் கவிதையா கொடுத்துருக்கீங்க

isaianban said...

ஆமினா said...
அழகு அழகு அழகு

வேறென்ன சொல்ல????? துயரத்தையும் அழகிய வரிகளால் கவிதையா கொடுத்துருக்கீங்க/////

தங்களின் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றி சகோதரி..

nithubaby said...

மறைந்தாலும் உன்னை நினைக்க நான் மறவேன்....
மறுத்தாலும் உன் நினைவில் நான் கரைவேன் ...


அருமை காஜா,,,,,,,,

isaianban said...

nithubaby said...
மறைந்தாலும் உன்னை நினைக்க நான் மறவேன்....
மறுத்தாலும் உன் நினைவில் நான் கரைவேன் ...


அருமை காஜா,,,,,,,,///

மிக்க நன்றி தோழி தங்களின் பொன்னான கருத்தோட்டத்திற்கு

Powered by Blogger.