Breaking News
recent

அளவான குடும்பம்...

ஆண் : அத்த மவ ரத்தினமே ஆசயுள்ள சித்திரமே
அத்த மவ ரத்தினமே ஆசயுள்ள சித்திரமே
நித்திரதான் ஓடி போச்சு நேரம் நடு சாமமாச்சு
வாடி மரகத குயிலே அடி ராசாத்தி
வாடி மரகத குயிலே
பெண் : அத்த மவ ரத்தினந்தான் ஆச உள்ள சித்திரந்தான்
அத்த மவ ரத்தினந்தான் ஆச உள்ள சித்திரந்தான்
நித்தம் நித்தம் தாங்கவில்ல ரோதனதான் தீரவில்ல
வேணா இது ஆகாத தொல்ல அட போமாமா
வேணா இது ஆகாத தொல்ல
ஆண் : பொள்ளாச்சி சந்தையில பட்டு சேல வாங்கிடவா
பொழுதானா உனக்கு வந்து கைகாலு அமுக்கிடவா
பொட்ட புள்ள வேனுமுன்னு பாழும்மனம் துடிக்குதடி
பொண்ணே பசும் பூங்காவனமே பெண்மயிலே
பொண்ணே பசும் பூங்காவனமே
பெண் : பட்டுசேல தந்து புட்டு பாடா படுத்திடுவே
பக்கத்துல நீயும் வந்து பாசாங்கு பண்ணிடுவே
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா நானே சொல்லிபுடுறேன்
வேணா நமக்கு இனி ஒன்னு அட மச்சானே போதும்
இந்த ரெண்டு ஆண் கண்ணு
ஆண் : பட்டணத்து ஆளு போல பொறுப்பில்லாம பேசாதடி
பத்து எட்டு புள்ள பெத்தா ஊருக்குள்ள தப்பில்லடி
வாழயடி வாழயாக பரம்பரைய செழிக்க வைப்போம்
அடியே எம் பட்டு பூங்கொடியே கண்மணியே
அடியே எம் பட்டு பூங்கொடியே
பெண் : பாட்டாக படிச்சாலும் வில்லு போல வளைஞ்சாலும்
அடம் புடிச்சாலும் ஆந்த போல முழிச்சாலும்
சொன்ன சொல்லில் மாத்த மில்ல யோசிக்கத்தான் ஒன்னுமில்ல
அரசாங்கம் சொல்வத கேளு எம் மச்சானே
அளவான குடும்பமே சீரு...




-----------உங்கள் அன்பு இசையன்பன்-------------------
டிஸ்கி 1 : இது கிராமத்து ஏற்கனவே இரண்டு (ஆண்)குழந்தைகள் கொண்ட கனவனும் மனைவியும் சேர்ந்து பாடுகிற மாதிரியான கற்பனை...
அளவான குடும்பம் வளமான வாழ்வு என்ற ”அரசின்” கருத்தினை மையப்படுத்தும் பாடல்


டிஸ்கி 2 : இந்த பாடலை உங்களுக்கு தோன்றும் நாட்டுப்புற மெட்டில் பாடிக் கொள்ளுங்கள் அல்லது படித்துக் கொள்ளுங்கள்...



----------------------------------------------------------------


அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

6 comments:

Arul Mozhi said...

அழகான கிராமியப்பாடல்
கருத்துக்கள் அருமை

Mathuran said...

அருமையானதொரு கிராமியப்பாடல்
பகிர்வுக்கு நன்றி

சக்தி கல்வி மையம் said...

அருமையான நாட்டுப்புற பாடல்...

isaianban said...

Arul Mozhi said...
அழகான கிராமியப்பாடல்
கருத்துக்கள் அருமை//////

நன்றி தோழி அருள்மொழி....

isaianban said...

மதுரன் said...
அருமையானதொரு கிராமியப்பாடல்
பகிர்வுக்கு நன்றி.////
நன்றி நண்பர் திரு மதுரன் அவர்களே... மிக்க மகிழ்ச்சி தங்களின் வருகை குறித்தும் கருத்து குறித்தும்

isaianban said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான நாட்டுப்புற பாடல்.../////

மிக்க நன்றி வேடந்தாங்கள் - கருன்..
தங்களின் வருகையில் மிக்க மகிழ்ந்தேன்...

Powered by Blogger.