Breaking News
recent

சிரிக்கப் பழகு...




"உனக்கு சிரிக்க நேரமில்லை என்றால்
நீ தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்" என வைரமுத்து அவர்கள் சொன்னதாக கேள்விபட்டிருக்கிறேன்..

இப்போலாம் மனிதன் அப்படிங்கறவன் மெஷினாகிட்டான்.. சிரிக்க மாட்டேங்கறான், சிந்திக்க மாட்டேங்கறான், சந்தோஷத்த அனுபவிக்க தெரியல, வாழ்க்கைய ரசிக்க தெரியல, விருந்தாளிங்க வரவேற்க தயங்குறான், பக்கத்துல உள்ளவங்ககிட்ட பேசறதுக்கு விரும்ப மாட்டேங்கறான், மனது வந்து யாரையும் பாராட்டறதில்ல, வாழ்த்துறது இல்ல, சிறகை வெட்டுன கிளி மாதிரி கூண்டுக்குள்ள இருந்துகிட்டு இவ்ளோதான் நம் உலகம் அப்படின்னு நினைக்கிறான், பணம் ஒன்னுதான் வாழ்க்கை அப்படின்னு நினைக்கிறான, சந்தோஷமா இருக்கறதா நடிச்சுகிட்டு தன்னைத்தானே ஏமாத்திக்கறான்.

மனித தன்மையில இருந்து இறங்கிட்டான் அப்படின்ங்கறதுக்கு அழகான உதாரணம் என்ன அப்படின்னா சிரிக்க மறந்துட்டான் அப்படிங்கறதுதான், உண்மையா மனுஷன் எப்போ மனுஷனா இருக்கான் அப்படின்னா குழந்தையா இருக்கும் போதுதான். பிறந்த குழந்தையை பாருங்க சிரிச்சுகிட்டே இருக்கும் கண்ண மூடி தூங்கிட்டு இருக்கும் தூக்கத்திலயே கூட திடீர்னு சிரிக்கும், அந்த குழந்தையை சிரிப்பூட்ட வடிவேலும் விவேக்கும் வந்து ஜோக் சொல்ல தேவையில்ல, தானாகவே சிரிக்கும் மரம் ஆடறத பாத்து, ஆள் நடக்கற பாத்து, காத்து அடிக்கற பாத்து, ஒரு ஆள் பக்கத்துல வந்தாலே கூட தானாக சிரிக்கும் ஏன்னா சிரிக்கறது மனிதனோட இயல்பு.. ஆனா வளர்ந்த பிறகு யாராவது சிரிக்கறோமா.?! சிரிப்பு அப்படிங்கறதை மறந்து அது ஒரு பெரிய தவறுங்கற அளவு போய்டுச்சு வாழ்க்கையில..

நான்கு பேர் இருக்கும் போது எதார்த்தமா சிரிச்சுட்டா என்ன கொஞ்சம் கூட மட்டு மரியாதையில்லாம சிரிக்கற அப்படின்னு சொல்றோம், அதுவும் பொம்பள புள்ளைங்களுக்கு (எங்க ஊர் பக்கத்துல) சிரிச்சுட்டா இவ அடங்காதவ அப்படி இப்படின்னு சொல்லிடுவாங்க.

இப்பலாம் பாருங்க மனிதன சிரிக்க வைக்கிறதுக்கு தனியா டிவி சானல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு மனுஷன் தள்ளப்பட்டுட்டான், அதுல வந்து நிறைய காமடி நடிகர்கள் மொக்க போட்டு படாத பாடு பட்டு அடிவாங்கி அடி கொடுத்து என்னலாமோ குட்டிகரணம் போட்டு சிரிப்பு மூட்டறாங்க இதிலிருந்து நாம என்ன நிலைமைக்கு மாறிட்டோம் அப்படின்னு நல்லா புரிஞ்சிக்கலாம்..

வாழ்க்கையை ரசணையா பார்க்க ஆரம்பிச்டோம் அப்படின்னா ரசிக்கறோம் அப்படின்னா சிரிப்புங்கறது தானா வரும். சிரிப்பு உள்ளத்திற்கு மட்டுமல்ல உடலுக்கும் நல்லது அப்படின்னு சொல்றாங்க, எல்லாரும் சிரிக்கப் பழகுவோம். நன்றி
...     

-------------------------------------------------------
சிரித்துக் கொண்டே அதிகப்பிரசங்கி இசையன்பன்   
 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியாகத்தான் சொல்லி உள்ளீர்கள்...

அருமைபிரசங்கி தான்... ஹிஹி...

வாழ்த்துக்கள்...

isaianban said...

திண்டுக்கல் தனபாலன் said...
சரியாகத்தான் சொல்லி உள்ளீர்கள்...

அருமைபிரசங்கி தான்... ஹிஹி...

வாழ்த்துக்கள்... //////

நன்றி நண்பரே.. மிக்க மகிழ்ச்சி நல்லா சிரிப்போம் :) :) :)

Unknown said...

சிரிக்கப் பழகுவோம்... :))) அதிகப்பிரசங்கித் தம்பீ ஈ ஈ ஈ... :))

Powered by Blogger.