Saturday, April 5 2025

காதலான என் இறைவா...


நீக்கமற நிறைந்திருக்கும் உன்னை 
நான் இதுவரை பாடியதில்லை
இன்று பாடாமல் போவதில்லை


உயிர் தந்தாய் உறவு தந்தாய்
உண்மை சொல்லில் உறுதி தந்தாய்

கவி தந்தாய் கல்வி தந்தாய்
புவி மீது எனக்கோர் வழி தந்தாய்

மனிதம் மறக்காத இதயம் தந்தாய்
மாண்டு போகாத தமிழ் தந்தாய்

எண்ணங்கள் தந்தாய் என்னுள் எழுச்சி தந்தாய்
எண்ணியதை வடித்திட நல் எழுதுகோல் தந்தாய்

விழிகள் தந்தாய் அதில் வழிய விழிநீர் தந்தாய்
கலைகொண்டே வாழ நற் தொழிலும் தந்தாய்

சொல் தந்தாய் அதில் சுவை தந்தாய்
பொல்லாத உலகிலும் நல்லவை நீ தந்தாய்

எல்லாம் கொடுத்த காதலான என் இறைவா
எந்நாளும் உனை நினைக்க வரமொன்று நீ தருவாய் ..

---------------------------------
இறையிடம் வரம்கேட்டு இசையன்பன்.. 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// காதலான என் இறைவா ///

அருமை...

வாழ்த்துக்கள்...

isaianban said...

திண்டுக்கல் தனபாலன் said...
/// காதலான என் இறைவா ///

அருமை...

வாழ்த்துக்கள்... ////

நன்றி நண்பரே.. மிக்க மகிழ்ச்சி :)

Powered by Blogger.