Friday, April 11 2025
Breaking News
recent

இதயக் கதவுகள். 4



உன்னுடனே...

வெட்ட வெளி விண்ணின் மையிருட்டு வேளை
தெளிந்த வெளிர் பால் நிலாவென உன் முகம்தனை
கண்டு களித்துக் கொண்டே இருக்கிறது என் மனது


எங்கோ கேட்கின்ற குயிலோசையுடன்,
சூரியனைச் சிறைகொண்ட தடாகத்தில்
பூத்திருந்த கமலந்தனை பார்க்கையில்
உன் வதனம் என் விழியில்
விழுந்து மோகம் கொள்ளச் செய்கிறது,
உயிர் காற்று உறைந்து போகிறது

நான் தனித்திருக்கும் வேளையிலும்
நீதான் இருக்கிறாய் என்னுடன்
நான் களித்திருக்கும் வேளையிலும்
நீதான் சிரிக்கிறாய் என்னுடன்

நினைவெல்லாம் உன் சுவாசம்
நொடியெல்லாம் உன்னுடனே வாசம்


-------- உங்கள் அன்பு இசையன்பன் :)

No comments:

Powered by Blogger.