Tuesday, April 29 2025

காதல் போதை..




கன்னியிவள் பார்வை கொள்ள
கண்கள் ரெண்டும் போதை கொண்டு
ஆடும் என்னோடு மெல்லத்தான்

நித்தம் இதழ் காதல் சொல்ல
முத்தம் பட்டு தேகம் எங்கும்
ஓடும் தேனாறு துள்ளித்தான்


இரவோடு காற்று வந்து
இசைபாடும் சேர்ந்து
இதமான கைகள் கொண்டு
அணைத்தாடும் சேர்த்து 

பூந்தோட்டம் தாங்காமல்
தள்ளாடும் வேர்த்து
பூமேனி பூவோடு
பூபாளம் இசைத்து

காதல்தான் கூற இனி
காலம் போதாது
இரு ஜோடிக்கண்கள்
மூடி திறக்க வெட்கம் தாளாது..

------------------------------------------------
---உங்கள் அன்பு இசையன்பன்-----

No comments:

Powered by Blogger.