Breaking News
recent

பாரமுதே.... பார் அமுதே....



கிள்ளைப் பூக்களாய் அவள் சிரிக்கும் அழகு
கொள்ளைப் போகத்தான் துள்ளிடும் மனது
ஆயிரம் குயில்கள் கூடி பாடும் சங்கீதம்
அவள் மௌனம் மொழியும் சப்த சுரம்

வானவில் அழகாய் அவள் தெரிந்தாள்
மேகத்தின் எழிலாய் உயிர் தரித்தாள்
மேனியில் மழையாய் இதழ் பதித்தாள்

நிலவொன்று நிலவொன்றை காணக் கண்டேன்
நிலை தடுமாறி விண் நிலவு நாணக் கண்டேன்
அதனாலே வெண் நிலவு தேயக் கண்டேன் - இந்த
பெண் நிலவு என் மனதில் பாயக் கண்டேன்

இருள் சூழ்ந்த கருங்குழலின்
மையல் கொண்டு நீண்டு நிற்கும் இனிய
இரவின் காதலன் நான் இறகு முளைத்த பாடகன் நான்

வண்ணமிகு மலையழகு கண்டு
கவி பாடும் கார்வண்டு
கன்னியிவள் கண்கள் என்று
குயில் கவி பாட கண்டேன் இன்று

மெல்லென அவள் இடும் நடையில்
இடை ஆடும் நாட்டியம் - அதைக்
கண்டு கவி ஓடும் பாட்டிடம்..

இடையிருக்கும் நூலுடையாய் என்
இதழ் மட்டும் தானிருக்க
மடை திறந்த வெள்ளமாய்
என் மனம் திறந்தேன் பாரமுதே
என்னைப் பார் அமுதே

.-------------------------
உங்கள் அன்பு இசையன்பன்

10 comments:

K.s.s.Rajh said...

சகோ ஏன் இரண்டு முறை பதிவாகியுள்ளது..என்ன காரணம்

சிவகுமாரன் said...

நன்றாக உள்ளது.
பாராட்டுக்கள்

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரம் குயில்கள் கூடி பாடும் சங்கீதம்
அவள் மௌனம் மொழியும் சப்த சுரம்/

அமுதாய் மொழிந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..

isaianban said...

K.s.s.Rajh said...
சகோ ஏன் இரண்டு முறை பதிவாகியுள்ளது..என்ன காரணம்//

ஒருமுறைதான் பதிவாகி உள்ளது ஆனால் பயர்பாக்ஸ் ல் மட்டும் இரண்டு இரண்டு தடவை தெரிகிறது எதனால் என தெரியவில்லை..

isaianban said...

சிவகுமாரன் said...
நன்றாக உள்ளது.
பாராட்டுக்கள்///

நன்றி நண்பரே!...

isaianban said...

இராஜராஜேஸ்வரி said...
ஆயிரம் குயில்கள் கூடி பாடும் சங்கீதம்
அவள் மௌனம் மொழியும் சப்த சுரம்/

அமுதாய் மொழிந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்../////

மிக்க நன்றி சகோ தங்களின் கருத்துகளுக்கு மிக்க மகிழ்ச்சி..

தமிழ்த்தோட்டம் said...

பாராட்டுக்கள்

isaianban said...

தமிழ்த்தோட்டம் said...
பாராட்டுக்கள்

மிக்க நன்றி நட்பே...

nithubaby said...

அருமையான கவிதை வரிகள் நண்பா வரிகள் ஒவ்வொன்றும் மனதில் பதிய வைக்கின்றன மீண்டும் என்னை படி படி என்கிறது உங்கள் வைர வரிகள்.....

வாழ்த்துக்கள்....

isaianban said...

nithubaby said...
அருமையான கவிதை///

மிக்க நன்றி தோழி நித்யஸ்ரீ..

Powered by Blogger.