Monday, April 14 2025

காதல் பாடகன்...





















காதல் தரும் ராகத்திலே
உந்தன் குரல் கேட்குதம்மா
ராகம் வரும் நேரத்திலே
காணும் லயம் இன்பமம்மா


ந்தன் மனம் ராகங்கள் பாடவே
வானத்தின் மேகங்கள் தூறல்கள் போடுது
பாட்டில் வைத்து வாழ்த்துக்கள் பாடவே
மின்னலும் வெட்டுது தேன்மழை கொட்டுது

ன் பாட்டின் ஜீவன்தான் நீயாகவே
உன் நெஞ்சின் தாளங்கள் நானாகவே
ஊணோடும் உயிரோடும் உறவாகவே
உயிரான ராகங்கள் யாழ் மீட்டுதே..

பௌர்ணமியே உந்தன் பார்வைதனில்
பாடல் நூறு படைப்பேன்
காணங்களை சொல்லிக் கொண்டே
வாழ்க்கை தனை கழிப்பேன்

தயமே நின்றாலும் இன்னிசை போகாது
துடிக்கவே மறந்தாலும் இசைக்கவே மறக்காது
பாடிடும் பாட்டினில் வாழ்ந்திடும் பாவையே
வாழ்கையின் பாட்டுக்கு பல்லவி நீதானம்மா..

---------------------------------
------உங்கள் அன்பு இசையன்பன்..........



-------------------------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

4 comments:

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் உங்கள் கவிதை அருமையான காதல் கவிதை சூப்பர்

ஆனால் ஏன் இரண்டு முறை எழுதியிருகீங்க.என்ன காரணம்

K.s.s.Rajh said...

இரண்டு முறை என்று நான் சொல்வது ஒரே பதிவின் கீழே மீண்டும் ஏன் அதை திரும்ப எழுதியிருகீங்க.
பொதுவாக இவை வாசகர்களுக்கு சலிப்பை உண்டு பண்ணும்.

isaianban said...

இரண்டு முறை என்று நான் சொல்வது ஒரே பதிவின் கீழே மீண்டும் ஏன் அதை திரும்ப எழுதியிருகீங்க.
பொதுவாக இவை வாசகர்களுக்கு சலிப்பை உண்டு பண்ணும்.

வணக்கம் நண்பரே.!
நான் இரண்டு முறை பதிவிடுவது கிடையாது. ஒரு முறைதான் பதிவிடுகிறேன் ஆனால் சில பிரௌசர் களில் இரண்டு முறை தெரிகிறது.
அதற்கு என்ன செய்வதென எனக்கும் தெரியவில்லை தங்களுக்கு ஏதேகும் விடை கிடைத்தால் தெரியபடுத்துங்கள் நண்பரே...

isaianban said...

இப்போது சரியாக்கிவிட்டேன் நண்பரே..

Powered by Blogger.