உறைகிறேன்...

பூவும் சிரிக்குதே
காற்றும் சினுங்குதே
புன்னகையில் பூமிதனை
பூர்த்தி செய்தாய்
வானம் கருக்குதே
மேகம் முழங்குதே
பார்வைதன்னில் வானிலையை
மாற்றி வைத்தாய்
மேனி சிலிர்க்குதே
கூச்சம் மறக்குதே
தேகமதை தென்றல்போல
மாறச் செய்தாய்
நேரம் குறையுதே
வாழ்க்கை சிறுக்குதே
செவ்விதழில் காலம்தனை
பூட்டி விட்டாய்
நியூட்டன் சொன்ன
விதியெல்லாம் பொய்யா
நான் உடலை தூக்கி
மிதக்கிறேன் மெய்யா
நிழல் கூட சிரிக்குதே அதை
நானும் ரசிக்கிறேன்
வெயில் கூட குளிருதே அதில்
நானும் உறைகிறேன்..
-------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்
அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...
6 comments:
பூவான, மேனி, நேரம், நீயூட்டன், நிழல்-நல்ல ரசனை மிகுந்த வரிகள்
Blogger Arul Mozhi said...
பூவான, மேனி, நேரம், நீயூட்டன், நிழல்-நல்ல ரசனை மிகுந்த வரிகள்////
நன்றி தோழி அருள்
வெயில் கூட குளிருதே அதில் நானும் உறைகிறேன்/// எத்துணை ரசனையய்யா உமக்கு.
Blogger Arul Mozhi said...
வெயில் கூட குளிருதே அதில் நானும் உறைகிறேன்/// எத்துணை ரசனையய்யா உமக்கு.
ரசித்தமைக்கு நன்றி தோழி அருள்
ஆம் காலம் மிகச் சிறந்த ஆசான் என்ற உண்மைதான் நானும் ஏற்க ஆரம்பித்துவிட்டேன்.
இராஜராஜேஸ்வரி said...
ஆம் காலம் மிகச் சிறந்த ஆசான் என்ற உண்மைதான் நானும் ஏற்க ஆரம்பித்துவிட்டேன்///
மிக்க நன்றி....
Post a Comment