Breaking News
recent

மேலோகத்து காவலாளியும் அறிவுரையும்..



அறிவுரை சொல்றது சுலபம், சொல்றவங்களே அதுமாதிரி நடந்து காட்டறது கஷ்டம்தான். அதுக்கான ஒரு குட்டி கதை

மேலோகத்துல எல்லாரும் சொர்க்கத்துக்கு போறதுக்கு வரிசையா நின்னாங்களாம் அவங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய பாறை இருந்துச்சு அதுல பிடிச்சு ஏறி போறதுக்கு ஒரு கயிறு கட்டி தொங்க விட்டிருந்தாங்களாம். நிக்கறவங்களுக்கு கீழே பயங்கற சூடா எண்ணெய் கொதிச்சுட்டு இருந்திச்சாம். அந்த இடத்துல காவலாளி ஒருவா நின்னுகிட்டு இருக்கார்.. அந்த காவலாளி மக்கள்ட பாத்து சொல்றார். எப்பா எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க இந்த கயிற பிடிச்சு எல்லாரும் மேல ஏறனும் பெண்கள்லாம் மொதல்ல ஏறுங்க. நல்லா கவனமா கேட்டுக்கோங்க அவங்க ஏறிகிட்டு இருக்கும் போது யாராவது மேல நிமிந்து பாத்துட்டா கீழே கொதிக்கற எண்ணையில விழுந்துவீங்க அப்படின்னு சொன்னாராம். எல்லாரும் சரின்னு தலையாட்டிட்டாங்க, பெண்களும் ஏற ஆரம்பிச்சிட்டாங்க, கொஞ்ச நேரத்துல தொம்ன்னு ஒருத்தர் எண்ணையில விழற சத்தம் கேட்டு எல்லாரும் யாருடா அது அப்படின்னு பார்த்தா இந்த விதிமுறைகளை சொன்னாரே அந்த காவலாளிதான் மேல அன்னாந்து பாத்திருக்கார் :) .. ஆக மத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது பெரிய விஷயமில்லை மொதல்ல சொல்றவங்க அது போல நடக்கனும்...

-------------------------------------
கதை : நன்றி மதுரை முத்து (எப்பவோ கேட்டது)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அறிவுரை...

isaianban said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்ல அறிவுரை... ///
:) :) நன்றி நண்பரே :)

Powered by Blogger.