Friday, April 11 2025
Breaking News
recent

அன்னையர் தினம் நமக்கெதுக்கு..



என்னவென நான் சொல்வேன்
அன்னையர் தினமுன்னு சொல்லறதை

வயித்துல கரு கொண்டு
கருவுக்கு உரு கொண்டு
திங்கள் பத்து சுமந்ததுக்கு
ஓராண்டில் ஒரு தினமா


உன்னைப் பெற சுமந்தவளை
நினைப்பதுக்கே நாள் குறிச்சா
வையம்தான் நிலைத்திடுமா
வாழும் வழி சீர் பெறுமா

மேலைநாட்டு மோகத்தால
மேல்தட்டு நினைப்பால
தாய்க்கு ஒரு நாளை ஒதுக்கற - அவ
தாய்மைக்கு நாள்தான் நீ குறிக்கற

மேன்மை பெற்ற தமிழ் மண்ணில்
தாயை போற்ற தனி நாள் உண்டா

நிதமும் தாயின் காலடியில்
நிலமாய் இருக்க பழகிக்கொள்..

------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

என்றும்...

isaianban said...

அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

என்றும்...
///// நன்றி நண்பரே என்றுமே அன்னையர்தினம்தான் :)

Powered by Blogger.