Thursday, May 1 2025

இதயக் கதவுகள். 2





அன்பே தந்துவிடு


கார்மேகம் பொழியும்
இடைவிடாத அடை மழையில்
உன் இடை உடையாய்
நான் இருக்க கனா காண்கிறேன்,


காதல் கனா வந்ததும்
கண்கள் ஒளிர்கிறது,
காற்றுக்குள் சிறை போகிறேன்,
காவியங்கள் பல காண்கிறேன்,

காதல் தேவதைகள் மலர்த்தூவ
வான்வெளிக்குள் வட்டமடிக்கிறேன்.

என் நரம்புகளைக் கோர்த்து
யாழ் இசைக் கொண்டு
ஆயிரம் பட்டாம் பூச்சிகள் ஒன்றாய் கூடி
காதல் கீதம் இசைக்கின்றது.

மீண்டும் மீண்டும் அடைமழையென
காதலில் ஊறிய ராகங்கள்
கனவுகளிலும் ஆயிரம், நினைவுகளிலும் ஆயிரம்

என் உயிர் மொழி படிந்த
உன் கொவ்வை இதழ்களை
ஒரு முறை என் இதழில்
பொருத்தித்தான் பாரேன்
நம் காதல் கவிகளை அவை பாடும்…


--------------------------- உங்கள் அன்பு  இசையன்பன் :)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

தொடர வாழ்த்துக்கள்...

isaianban said...

திண்டுக்கல் தனபாலன் said...
ரசித்தேன்... """"

வணக்கம் சார் மிக்க நன்றி :) :)

Powered by Blogger.