Sunday, May 4 2025

இதயக் கதவுகள். 3



குளிர் பார்வை

எங்கிருந்தோ வந்த பனிக்காற்றாய்
என் முகத்தில் மோதுகிறது
உன் குளிர் பார்வை.

நிலைகொள்ளாமல்
உருண்டு கொண்டே இருக்கும்
அக் கருவிழிக் கோளங்கள்
எனை நிலை தடுமாறச் செய்கின்றது.


உச்சி முதல் தொடங்கிய “குளிர்ச் சலனம்”
என் கால் விரல்களை அடையும் யுகம் வரை
நான் துடிதுடித்துப் போகிறேன்.

ஒற்றை பார்வை செய்த மாயத்தில்
என் தேகமெங்கும் மின்னல்
ஊடுவிப்பாயத் தொடங்கியது.

தூரத்து பார்வையில் தடுமாறிய நான்
உன் விழியை அருகே நேரிட்டால்
கரைந்தே போவேனோ

--------------- உங்கள் அன்பு இசையன்பன் :)

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்... (படமும்)

பார்வை ஒன்றே போதுமே...
பல்லாயிரம் சொல் வேண்டுமா...?

தொடர வாழ்த்துக்கள்...

isaianban said...

திண்டுக்கல் தனபாலன் said.//// மிக்க நன்றி நண்பரே தங்களின் பின்னூட்டத்திற்கு...

Powered by Blogger.