Saturday, April 26 2025

வரம்..



பேசும் பூவே நீயோ இங்கு
பாடும் ராகம்தானோ
வீசும் தென்றல் நீயோ வந்து
கூடும் மேகம்தானோ
மானே உன்னை பாடல் கொள்ள
தோற்கும் சொற்கள் யாவும்
தேனே எந்தன் காதல் மட்டும்
பாடல் கோடி பாடும்

வேண்டும் உந்தன் காதல் என்று
நாளும் ஜீவன் வாடும்
மீண்டும் தன்னை மீட்ட சொல்லி
வீணை வந்து கோரும்
சோகம் போகும் நேரம் சொல்லு
என்றே இங்கு நானும்
தேகம் நோக உன்னை கேட்டேன்
பாடல் கொண்டு நாளும்

மாலை ஒன்று சூடிக் கொள்ள
வாழ்வில் வரம் வேண்டும்
வேளை நல்ல வேளை பார்த்து
வாழ்வே இன்பம் ஆகும்
சோகம் என்றும் தீர்க்கும் வல்ல
காதல் என்றும் வேண்டும்
காதல் சொல்லும் வார்த்தை கொண்டு
காலம் போக்க வேண்டும்

--------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன்

4 comments:

K.s.s.Rajh said...

கவிதை காதல் ரசம்

isaianban said...

K.s.s.Rajh said...
கவிதை காதல் ரசம்///

மிக்க நன்றி தோழரே...

nithubaby said...

அருமையான காதல் ...!
அருமையான கவிதை......
வாழ்த்துக்கள்.....

isaianban said...

nithubaby said...
அருமையான காதல் ...!
அருமையான கவிதை......
வாழ்த்துக்கள்.....///

மிக்க நன்றி தோழி நித்யஸ்ரீ

Powered by Blogger.