Breaking News
recent

பாதகி...

சிந்தையென என்னுள் வந்தவள்,
விந்தையென ஒன்றிக் கலந்தவள்,
நிந்தையென என்னை ஒதுக்கி மறந்தாளே...

ள்ளம் அது கள்ளம் உரைக்கவே,
சொல்லும் அதில் மெளனம் மொழியவே,
வெள்ளம் என என்னை அடித்துப் போனாளே...

ஞ்சம் அது ரணமாய் நிரம்பிட,
துஞ்சம் அதை கண்கள் மறந்திட,
தஞ்சம் தந்த என்தன் மனமதை சிதைத்தாளே...

கொஞ்சும் முகம் நிழலாய் தவழ்ந்திட,
விஞ்சும் மனம் அன்பில் வெதும்பிட,
வஞ்சம் செய்து காதலை துடித்திடச் செய்தாளே.,
நெஞ்சம் தனை வேரொடு பறித்துச் சென்றாளே...
-------------------------------------------------------------------
------------உங்கள் அன்பு இசையன்பன்----------------



அன்பு நண்பர்களே!.. படித்துவிட்டு தங்களுடைய பொன்னான கருத்துக்களை சொல்லிட்டுப் போங்க.., அப்படியே ஓட்டும் போட்டுட்டு போங்க...

8 comments:

Kousalya Raj said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.

isaianban said...

Kousalya said...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை. வாழ்த்துக்கள்.///

தங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி தோழி மிக்க மகிழ்ச்சி...

ஜெய்லானி said...

கோரல்லு ஏதோ போட்டுகிட்டு இருந்த மாதிரி நினைவு வந்திச்சே...அட நான் உங்களை சொல்லல பாஸ்..!! :-))

விட மாட்டோமுல்ல :-))

அன்புடன் மலிக்கா said...

யாரந்த பாதகி தம்பி..

சொல்லுங்க என்னிடம் ஒருகை பாத்திடலாம்..

கவிதை மிக அருமை..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிக அருமையான கவிதை .. வாழ்த்துக்கள்

isaianban said...

Blogger ஜெய்லானி said...

கோரல்லு ஏதோ போட்டுகிட்டு இருந்த மாதிரி நினைவு வந்திச்சே...அட நான் உங்களை சொல்லல பாஸ்..!! :-))

விட மாட்டோமுல்ல :-))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............

isaianban said...

Anonymous அன்புடன் மலிக்கா said...

யாரந்த பாதகி தம்பி..

சொல்லுங்க என்னிடம் ஒருகை பாத்திடலாம்..

கவிதை மிக அருமை..////

அய்யோ அக்கா நீங்க எல்லாம் இருக்கும் போது என்ன யாராவது ஏமாத்த முடியுமா..

isaianban said...

தோழி பிரஷா said...

மிக அருமையான கவிதை .. வாழ்த்துக்கள்//////

வணக்கம் தோழி.. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Powered by Blogger.