Breaking News
recent

அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா

சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
 
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு

அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே


பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு


அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே

----------------------------------------------------------

இந்த பாடல் கவிஞர். புலமைப்பித்தன் இயற்றி, கோயில் புறா என்ற திரைப்படத்திற்காக இளையராஜா அவர்கள் இசையமைத்தது.

இந்தப்பாடல் எனக்கு மிக, மிக பிடித்தப்பாடல். ஒரு நாளைக்கு எத்துனை தடவைகள் வேண்டுமானாலும் கேட்கலாம், அப்படி ஒரு ரசனையான பாடல்.

இசையோடு, இசைவாக தாய் தமிழை அமுதம் போல் அழகாக வடித்திருப்பார் கவிஞர். புலமைப்பித்தன். இதில் இளையராஜா வின் இசையும், குரல் அரசிகளான பி.சுசீலா மற்றும் உமாரமணன் குரல்களும் மிகப் பெரிய பலம்.

 இந்த சுட்டியில் சென்று  நீங்கள் அந்த பாட்டை கேட்டு, பார்த்து, படித்து ரசிக்கலாம்.

-------------------------------------
உங்கள். இசையன்பன்............

1 comment:

பாலா said...

தமிழிசையே தரணியிலே முதலிசையே... தமிழே நாளும் நீ பாடு.... அருமையான வரிகள், அதற்கு உயிரூட்டிய இசைஞானிக்கு வானளாவிய நன்றிகள். வரிகளை வரைந்து வைத்தமைக்கு உமக்கும் எனது நன்றிகள், ஐயா!

Powered by Blogger.