06 January 2011

அதென்ன மல்டிமீடியா.?

Posted in

அன்பு நண்பர்களே!

இப்போதெல்லாம் இந்த மல்டிமீயா என்ற சொல்லை அதிகம் கேட்கமுடிகிறது, நான் எனது நண்பரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது (நான் வரைகலைத்துறையில் இருப்பதால்) அவர் மாப்ளே எனக்கு மல்டிமீடியா படிச்சு தாயேன் என்று சொன்னார். உடனே அவருக்கு மல்டிமீடியா என்பதனை புரிய வைத்தேன். சரி அதை தளத்தில் எழுதலாம் என்றதன் ஆக்கம்தான் இது.

மல்டிமீடியா என்றால் என்ன?
அதனால் என்னவெல்லாம் செய்யலாம்?
அதனால் என்ன இலாபம்?என்றெல்லாம் அதைப்பற்றி ஆயிரம் கேள்விகள்.
ஆனால் மல்டிமீடியா என்ற ஒரு படிப்போ அது சொல்லிக்கொடுக்கும் படியானதோ நிச்சயமாக இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். (தனித்தனி மென்பொருளைத்தான் படிப்பிக்க முடியும்)

ஆம் உண்மைதான் பல மென்பொருட்களின் கூட்டமைப்பே மல்டிமீடியா, அதிலும் இன்னென்ன மென்பொருள் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற வரையரை கிடையாது, அப்படி யாரும் பட்டியலிடவும் முடியாது.

கலைத்துறையில் கணினி துணை வந்துவிட்டதா அது தான் மல்டிமீடியா என சுருங்க கூறிவிடலாம்.

உதாரணமாக:
நாமெல்லாம் சினிமா பார்க்கிறோம் அதை அவர்கள் முதலில் இருந்து கடைசிவரை அப்படியே எடுத்துவிடுவதில்லை, முன்னுக்கு பின் முரணாகத் தான் காட்சிகள் எடுக்கப்படுகின்றது. அதை ஒழுங்கு படுத்த (எடிட்டிங்) சில மென்பொருட்கள் பயன்படுகின்றன, பாடல்களை பதிவு செய்ய, ஒலி, ஒளி அமைப்பினை சரி செய்ய மற்றும் பதிவு செய்ய, தலைப்பு விபரங்கள் (டைட்டில்) இட, சண்டைக்காட்சிகளிலும் மற்றும் முக்கிய காட்சிகளிலும் சவுண்ட் எபெக்ட் செய்திட, மேலும் கேமரா ட்ரிக் காட்சிகளிலும், இரு பரிமாண 2D, முப்பரிமாண 3D கிராபிக்ஸ், அனிமேஸன் காட்சிகளிலும், வேறு வேறு மென் பொருட்கள் பயன் படுத்தப்படுகின்றன, ஏன் கதை திரைக்கதை வசனம் கூட இப்பொழுது மென் பொருள் உதவியுடன்தான் எழுதப்படுகிறது, மென்பொருளில்லாத சின்னத்திரையினை நினைத்துக் கூட பார்க்க இயலாது இவை அத்தனையும் மல்டிமீடியாவில்தான் அடங்கும்.

நாம் காலையில் எழுந்ததும் தினசரி செய்தித்தாள் பார்க்கிறோமே அதை உண்டாக்கியது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருளே  இதுவும் மல்டிமீடியாவே.

நாம் இப்போது பயன் படுத்துகிற கணினியின் அம்சம் மல்டிமீடியாதான்.

தொழிற்சாலைகளில் இரும்பை உருக்குவதிலிருந்து,  வேறு வடிவாக்குவது வரை, கட்டிட துறையில் கடடிடம் வடிவமைப்பது முதல் அதன் உறுதி திறன் மற்றும் நிலைக்கும் காலம் வரை அறிய உதவுவது மென்பொருட்களே,

நெசவுத் தொழிலில் மென்பொருட்களின் பங்கு இன்றியமையாதது.

விளம்பரத்துரையில் நாம் பார்க்கும் சிறு கடையின் பெயர்பலகை முதல் பெரிய பெரிய விளம்பர பலகை (ஹோர்டிங்ஸ்) அத்துனையும் தயாராவது மென் பெருளின் உதவி கொண்டே,

 நீங்கள் போட்டோ ஸ்டுடியோவிற்கு செல்கிறீர்கள் அவர் உங்களை படம் எடுத்து அதை பிரிண்டு செய்கிறார் அல்லவா அதுவும் மென்பொருளின் உதவியில்தான், அந்த படத்தை எடிட்டு செய்கிறாரா அதுவும் சில மென்பொருளின் உதவியினால்தான்,

ஆக மேற்கூறிய அனைத்து மென்பொருட்களின் மொத்த கூட்டமைப்பே மல்டிமீடியா.

மொத்தத்தில் நாம் கேட்டவைகள், பார்த்தவைகள் கணினியின் மூலமாக உருவாக்கப்பட்டு இருந்தால், அதை உருவாக்கிய மென்பொருட்களின் தொகுப்பே மல்டிமீடியா ஆகும்.

இன்னென்ன மட்டும் படித்துவிட்டால் நான் மல்டிமீடியா படித்துவிட்டேன் என்றோ இன்னென்ன மென்பொருள் மட்டும் வைத்து மல்டிமீடியா கற்பித்து தருகிறேன் என்றோ யாரும் கூறி விட முடியாது.

குறிப்பு: இதனைப் பற்றி கணினி மேதைகள் நிறைய எழுதியிருக்கலாம், இங்கு தெரியாதவர்கள் புரிந்து கொள்வதற்காக எளிமையாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

தயவு செய்து உங்கள் பின்னூட்டங்கள்தான் எனக்கு உற்சாகம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

(அடுத்தடுத்த காலங்களில், சில சில வரைகலை மென்பொருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்)
___________
ஆக்கம்,
இசையன்பன்.

4 comments :

நல்ல தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி

basu said...

Hi da, enperu sollamale unakku teriyum nu ninaikiren...nalla oru muyarchi...kai vittu vidathe.
oru chinna vinnappam....ithodu SOFTWARE DOWNLOAD cheyyura linkum unnoda website le add pannina nalla irukkum
aporam, step by step tools use pannuvathu eppadinu solli kodu..
insha allah unakku allah arul purivanaga..(MPM Friends Admin.)

நன்றி சிவகுமரன் ஐயா
உங்களின் பேராதரவுடன் இன்னும் எனக்கு தெரிந்த விசயங்களை மேலும் மேலும் தர காத்திருக்கிநேன் தற்போதைய பதிவையும் பார்த்து கருத்திடவும். நன்றி.

அஸ்ஸலாமுஅலைக்கும் மச்சான், எம்.பி.எம் க்கு நான் தான் செயலாளர் ன்றத மறந்துடாதே.....
உனது கருத்துக்கு மிக்க நன்றி கண்டிப்பாய் தொடருவோம், மற்றும் நீ கேட்ட லிங்கும் அளிக்கிறேன் இன்ஷா அல்லாஹ். நிச்சயமாய் எனக்காக துஆ செய்யவும்..