Saturday, May 10 2025

காதலைப் பெற்று உயிரைத் தருவேன்!!!






















தங்கச் சிலையே! உந்தன் மௌனம், எந்தன்
உயிரைக் கடத்திப் போகுதடி.,
உன் மௌனம் அடித்து, எந்தன் இதயம்
நிலத்தில் துள்ளி வீழுதடி.

















உன் கண்களைக் கண்டால் அக்கணமே, நான்
வானத்தைத் தாண்டிப் பறந்திடுவேன்.,
உன் காதலைச் சொன்னால் இக்கணமே, ஒரு
மின்னலைப் பிடித்து மிதந்திடுவேன்.


















உன் கனவைத் தந்து, தூக்கம் பறித்து,
விழியில் நடனம் ஆடுகிறாய்.,
நான் காதலைப் பெற்று, உயிரைத் தருவேன்
வேறென்ன நீதான் வேண்டுகிறாய்..






















----------------------------------------------------

---------------இசையன்பன்----------------


(புலிய பாத்து பூனை சூடு போட்டிச்சாம். அந்த கதையில எனதாருயிர் நண்பர் மானசீக காதல் கவிதை குரு தஞ்சை அண்ணாச்சிய பாத்து நாமலும் ஏன் ஒரு காதல் கவித எழுத கூடாதுன்னு ஒக்காந்தேன்.  ஒன்னு ஒரு தலைக்காதலா வருது இல்லன்னா காதல் தோல்வியா வருது..(ம்... நமக்கு ஏற்பட்ட அனுபவம்தானே நமக்கு வரும்). சரி.. சரி ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும்ன்னு பதிவாக்கிட்டேன். புலி வந்து என்ன சொல்ல போகுதுன்னு தெரியல......ஹிஹிஹி...)

5 comments:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள நண்பருக்கு,

மிக்க நன்றி // எனதாருயிர் நண்பர் மானசீக காதல் கவிதை குரு தஞ்சை அண்ணாச்சிய // என்று கூறியமைக்கு...

என்னதான் பிறர் எடுத்துசொன்னாலும் நம் மனதுக்குள் பிறக்கும் எண்ணங்களே கவிதையாக வடிக்க முடியும்... என் கவிதைகளையும் காதலித்து உங்கள் மனதின் சிந்தனைகளை கவிதையாக வடித்தமைக்கு மிக்க மகிழ்ச்சி...

மூன்று கவிதைகளும் முத்தாக தெரிகின்றது...

காதல், உயிரை வேண்டுவதில்லை....ஆனால் காதலுக்காக நாம் உயிரை விட்டுக்கொண்டு...

அருமை... வாழ்த்துகள்...

KAJA MOHIDEEN ISAIANBAN said...

மிக்க நன்றி நண்பரே!
சரி என்னதான் இருந்தாலும், உங்க அளவிற்கு வருமா??
மீண்டும் மீண்டும் நல்ல கவிதைகளுக்கு முயற்சி செய்கிறேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அவை மீண்டும் மீண்டும் முளைக்கும் நல்ல விதைகளாக மாறட்டும்...

வாழ்த்துகள்....

Arul Mozhi said...

உந்தன் மெளனம் அடித்து
நிலத்தில் துள்ளி விழுகு தடி
சரியன கருத்து.அழகான வலி[இதில் மட்டுமேகிடைக்கும்]

isaianban said...

Arul Mozhi said...

உந்தன் மெளனம் அடித்து
நிலத்தில் துள்ளி விழுகு தடி
சரியன கருத்து.அழகான வலி[இதில் மட்டுமேகிடைக்கும்]////

மிக்க நன்றி தோழி!. ஆம் அழகான வலி, அது சுகமான வலி...

Powered by Blogger.