Breaking News
recent

நிலவும், மனிதர்களின் தோற்றமும்.



சிலரின் தோன்றங்களையும் செயல்பாடுகளையும் வைத்து அவர்களை நாம் உயரியவர்கள் என எண்ணி விடுவதுண்டு, உண்மையில் அவாகள் சில சமயம் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம், யாரையும் வெளித் தோற்றத்தினை வைத்து எடை போடக்கூடாது, 

அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நிலவு., நிலவு இரவில் ஒளி தருகிறது, குளிர்ச்சியை தருகிறது, நிலவில் கலங்கம் இருக்கிறது, வெண்ணிலா, நிலவு தேய்கிறது, நிலவு வளர்க்கிறது அப்படிலாம்தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம், ஆனால் இவற்றிற்கும் நிலவுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா என்றால், இது போல நிலவில் நிகழ்கிறதா என்றால் அது உண்மையில்லைதானே.?


சூரியஒளியைதான் நிலவின் ஒளி என்கிறோம், நிலவு தேய்வதும் இல்லை மறைவதும் இல்லை, ஆக அதன் வெளித்தோற்றமே அதன் அடையாளமாகவும் திறமையாகவும் நம்மால் மாற்றப்பட்டு விட்டது.

ஆக. மிகப் பெரிய திறமைசாலி தோற்றத்தில் மிகவும் அப்பாவியாக எளிமையாக இருக்கலாம், திறமையற்றவர்கள் ஆடம்பரமாக இருக்கலாம் என்பதை புரிந்து கொண்டால் நலமே விளையும்..


-----------------------------------------------
உங்கள் அன்பு இசையன்பன் 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// யாரையும் வெளித் தோற்றத்தினை வைத்து எடை போடக்கூடாது ///

ஒப்பிட்ட விதம் அருமை...

isaianban said...

திண்டுக்கல் தனபாலன் said...
/// யாரையும் வெளித் தோற்றத்தினை வைத்து எடை போடக்கூடாது ///

ஒப்பிட்ட விதம் அருமை... //////

நன்றி நண்பரே.. :) தாங்கள் கருத்திட்டதற்கு மகிழ்ச்சி..

Powered by Blogger.