Breaking News
recent

செந்தமிழ் பூமானே...


செந்தமிழ் பூமானே,
பூக்களின் செந்தேனே,
கம்பனும் சொல்லாத,
கவிதை உன் னிதழானதே...


நித்திரைக் கொள்ளாது,
நேரமும் செல்லாது,
நித்தமும் தடுமாறி,
காதலில் கரைகின்றனே...

யிரினில் உனை வைப்பதா,
உருகியே நிதம் காய்வதா,
மடியோடு தலைசாய்த்து கொண்டாலென்ன,
உணர்வோடு உயிராக கலந்தாலென்ன...

நிலாக் கூட்டம் பக்கம் வந்து,
எனை நோக்கி சிரிக்கக் கண்டு,
நிதம் உனை ரசிப்பேனே பூங்கொடியே...

னக்காக ஏங்கும் நெஞ்சம்,
உயிராக எண்னும் என்றும்,
மறக்காமல் போகாதே ஆருயிரே...

ண் பார்க்க காதல் வந்து அணைக்கின்றதே,
இடம் மாறி இதயம் நூறு துடிக்கின்றதே...

னக்காக வாழ்க்கைத் தந்தால்,
உயிர் வாழுவேன்...
-----------

உங்கள் அன்பு....இசையன்பன்...

(நன்றாக படிங்க என்ன தோனுதுன்னு சொல்லுங்க)

7 comments:

ஜெய்லானி said...

//(நன்றாக படிங்க என்ன தோனுதுன்னு சொல்லுங்க) //

படத்துக்கு கவிதையா ? இல்லை கவிதைக்கு படமான்னு முதல்ல சொல்லுங்க ஹி..ஹி...!!

senkunroor said...

காதல் சொட்டுதுங்க! தொடர்ந்து எழுதுங்க!!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

திரைப்பாடல் எழுத முயலுங்கள்! நிச்சயம் வெல்வீர்கள்!! கவிதை சுண்டியிழுக்கும் விதத்தில் இருக்கிறது!

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...
This comment has been removed by the author.
isaianban said...

ஜெய்லானி said...படத்துக்கு கவிதையா ? இல்லை கவிதைக்கு படமான்னு முதல்ல சொல்லுங்க ஹி..ஹி...!!///

ஹிஹிஹிஹி ரெண்டுக்கும் ரெண்டு, ஹிஹிஹி...

isaianban said...

senkunroor said...

காதல் சொட்டுதுங்க! தொடர்ந்து எழுதுங்க!!

மிக்க நன்றி நண்பரே! தங்களுடைய மேலான ஆதரவிற்கு மிக்க மகிழ்ச்சி

isaianban said...

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

திரைப்பாடல் எழுத முயலுங்கள்! நிச்சயம் வெல்வீர்கள்!! கவிதை சுண்டியிழுக்கும் விதத்தில் இருக்கிறது!

மிகவும் நன்றி நண்பரே! தங்களுடைய வாழ்த்துக்களுக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி

Powered by Blogger.