வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4 பாகம் - 1
அன்பான நண்பர்களே!, சகோதர, சகோதரிகளே!
உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!
எனது முந்திய (அதென்ன மல்டிமீடியா) பதிவில் பின் வரும்காலங்களில் சில வரைகலை மென்பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தேன், அதற்கு ஆவலுடன் எதிர் நோக்கிய (தமிழ் நண்பர்கள் தள) மற்றும் இதர நண்பர்களுக்கு எனது ஆயிரமாயிரம் நன்றிகள். எனக்கு பின்னூட்டங்களிட்டும் கருத்துக்கள் தெரிவித்தும் என்னை நிச்சயமாய் ஊக்குவிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எனது இந்த அடுத்த படைப்பு.
மல்டிமீடியா என்பதை ஓரளவு நன்றாக புரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இங்கு தொடர்ந்து நாம் மல்டிமீடியா சம்பந்தப்பட்ட மென்பொருட்களை தெரிந்து கொள்ளலாம்.
--------------------------------######------------------------------------------
--------------------------------######------------------------------------------
வித்தியாச கோணத்தில் விரிவான கோரல்டிரா X4
பாகம் - 1
பாகம் - 1
பரவலாக நாம் வரைகலை மென்பொருள் என்றதும் சற்றும் யோசிக்காது சட்டென நினைவில் வருவது போட்டோஷாப் மற்றும் கோரல்டிரா இதில் நாம் கோரல்டிராவை முதலில் நன்றாக விரிவான முறையில் (அட்வான்ஸ்ட் பார்மட்) பார்க்கலாம். போட்டோஷாப்பைப் பற்றி நிறைய பேர் எழுதுவதால், கோரல்டிராவினை பார்க்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை நண்பர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்தத் தொடராக போட்டோஷாப்பினை பார்க்கலாம்.
இந்த தொடர் உங்களை ஒரு கணினி வரைகலையாளராக்க வேண்டும் என்ற எண்னத்தில் பார்த்துப் பார்த்து சரியாக விளக்கவேண்டும் என்று ஆராய்ந்து எழுதுகிறேன். எனது எண்னம் வெற்றியடையும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
இந்த தொடர் உங்களை ஒரு கணினி வரைகலையாளராக்க வேண்டும் என்ற எண்னத்தில் பார்த்துப் பார்த்து சரியாக விளக்கவேண்டும் என்று ஆராய்ந்து எழுதுகிறேன். எனது எண்னம் வெற்றியடையும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
நண்பர்களே! கோரல்டிரா என்பதனை பார்ப்பதற்கு முன் கோரலையும் போட்டோஷாப்பையும் பற்றிய ஒரு சிறு அடிப்படை ஒற்றுநோக்கி (கம்பயர்) பார்ப்பது இங்கு அவசியமாகிறது என்று கருதுகிறேன்.
போட்டோஷாப்
1) போட்டோஷாப் என்பதன் அடிப்படை இமேஜ் பிக்ஸெல்ஸ் இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான அளவு பிக்ஸெல்ஸை முதலிலேயே தெரிவு செய்ய வேண்டும். உங்களின் வேலை முடிந்த பின்னர் நீங்கள் பெரிது படுத்தினால் அந்த இமேஜின் பிக்ஸெல்கள் கசிந்து படமோ அல்லது நீங்கள் செய்த வேலையோ, டிசைனோ வீணாகிப்போய்விடும். (பிக்ஸெல்ஸ் ஐ ப்பற்றி கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் தனியாக பார்க்கலாம்).
2) போட்டோஷாப் ன் வேலை இடம் (வொர்க் ஏரியா) ஒளி ஊடுருவக்கூடிய கண்ணாடி காகித அடுக்கு (டிரான்ஸ்பரன்ட் ஷீட் லேயர்ஸ்) ஆக இருக்கிறது.
3) இதில் நீங்கள் செய்யப்போகும் அனைத்து வேலைகளையும் தூரிகை கொண்டு செய்யப்படுவதாகவே கருதப்படும் (பிரஷ் ஆர்ட் வொர்க்ஸ்)
4) போட்டாஷாப்பில் குறிப்பிட்ட, தேவைப்படும் அளவுகளில் அடுக்கினை (லேயர்ஸை) வெட்டி வேறு இடங்களில் ஒட்டலாம்.
5) இது முக்கியமாக நிழற்பட கலைஞர்களுக்கு, மற்றும் ஓவியர்களுக்கு மிகவும் தோள் கொடுக்கக் கூடியது.
6) இதுபோன்ற வேலைகளுக்கு பல மென்பொருட்கள் இருந்தாலும், பயனாளர் எளிய முறையில் பயன்படுத்த ஏதுவாக (யூசர் பிரண்ட்லி) இருப்பதனால் உலகெங்கும் பரவலாக இது பயன்படுத்தப் படுகிறது.
கோரல்டிரா
1) கோரல்டிரா என்பதன் அடிப்படை வெக்டார் இல்லஸ்ட்ரேஷன் என்பதாகும். இதில் நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களின் தேவைப்படி பெரியதாகவோ சிரியதாகவோ மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் செய்த வேலையின் தரம் எந்தவிதத்திலும் பாதிப்படையாது. (பிக்ஸெல்ஸ் ஐ ப்பற்றிய கவனம் தேவையில்லை)
2) கோரல்டிராவின் வேலை இடம் (வொர்க் ஏரியா) ஒரு பலகையாக கருதப்படுகிறது.
3) இதில் நீங்கள் செய்யப்போகும் அனைத்து வேலைகளும் கோடிட்ட ஓவியம் (லைன் ஆர்ட்) எனக் கொள்ளப்படும், இது கிட்டத்தட்ட காதிதத்தைவெட்டி ஒட்டி ஒரு காதித ஓவியம் தயாரிப்பதற்கு சமம். நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு புள்ளியும், கோடுகளும் தனித்தனியாகவே (ஆப்ஜக்ட்) இருக்கும் தேவைப்பட்டால் அவற்றை இணைக்கலாம், நீக்கலாம். இங்கு தூரிகைக்கு வேலையில்லை. (தூரிகையை உபயோகித்து படைத்தது போன்று தோற்றம் (பிரஷ் எபெக்ட்) செய்யலாம், அது எப்படி என பின்வரும் பாடங்களில் பார்க்கலாம்).விளம்பரத்துறையின் வடிவமைப்பாளர் (ஆட் டிசைனர்ஸ்) களிடம் அசைக்க முடியாத இடம் உண்டு.
4) இது பெரும்பான்மையாக அச்சுவிளம்பர (பிரிண்ட் ஆட்ஸ்) துறையிலும், அச்சுத்துறையிலும், அச்சிற்கான வண்ணப்பிரித்தலுக்காகவும் (கலர் செப்பரேஷன்) மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் கோரல்டிரா மென்பொருளுக்கு
5) பல மென்பொருட்களில் இல்லாத பல சிறப்பம்சங்கள் இதில் ஏராளம் உண்டு, போட்டோஷாப் போல யூசர் பிரண்ட்லி யாக இல்லை என பலபோர் சொன்னாலும், சற்று கவனமாக புரிந்து கொண்டால் எடுப்பார் கைப்பிள்ளை போன்றது என்பதனை யாரும் மறுக்க மாட்டார்கள்.

தொடருவேன் ”இன்ஷா அல்லாஹ்”
படைப்பு : இசையன்பன் @ காஜா மைதீன்
அன்பர்களுக்காக நினைவுகூறுகிறேன் இந்த படைப்புகள் என்னுடைய சொந்த அனுபவம், முயற்சி, தயவு செய்து இதை நீங்கள் இதை நகலெடுத்து உங்களின் வலையிலோ அல்லது வேறு எங்கிலுமோ பதியவோ, அச்சாக்கவோ, கூடாது நிச்சயமாக இது கடுங்குற்றமாகும். இந்த படைப்புகள் பதிப்பு காப்புரிமை சட்டப்படி பதிவுசெய்யப்பட்டுள்ளது என எச்சரிக்கிறேன்.
இந்த தொடரின் சம்பந்தமாக தங்களுக்கு ஏதெனும் சந்தேகங்கள் இருந்தால் தாராளமாக கேட்கலாம். உங்கள் சந்தேகங்களை, தங்கள் கருத்துக்களுடன் பதிவு செய்யலாம்.

9 comments:
அருமையான விளக்கங்களுடன் நல்லதொரு முயற்சி...
எனக்கு நீங்கள் கூறும் மல்டீமீடியா மென்பொருட்களை எந்தவித அனுபவ அறிவும் கிடையாது...
கண்டிப்பாக என்னை போன்ற அறிந்திராத சிலருக்கு கண்டிப்பாக உதவும்...
உங்கள் முயற்சி, ஆர்வம் வெற்றி பெற என் மனதார வாழ்த்துகள்...
இனி வரும் நாட்களில் கற்கும் ஆர்வத்துடன்...
மேலும் நீங்கள் மென்பொருளை நாங்கள் எங்கே தரவிறக்கம் செய்யலாம் போன்ற பயனுள்ள தகவல்களையும் அள்ளித்தாருங்கள்...
அன்புடன்,
தஞ்சை.வாசன்
தஞ்சை.வாசன்:///
அருமையான விளக்கங்களுடன் நல்லதொரு முயற்சி...
எனக்கு நீங்கள் கூறும் மல்டீமீடியா மென்பொருட்களை எந்தவித அனுபவ அறிவும் கிடையாது...
கண்டிப்பாக என்னை போன்ற அறிந்திராத சிலருக்கு கண்டிப்பாக உதவும்...
===========
உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் தொடங்கி இருக்கிறேன். இதன் மூலம் நண்பர்கள் பயனடைந்தால் நிச்சயமாக நான் நன்மை பெறுவேன், மகிழ்ச்சியடைவேன்.
மேலும் தரவிறக்க சுட்டி இடுகிறேன்.. மிக்க நன்றி..
Vinoth said...
தொடர்வதில் மகிழ்ச்சி
எனக்கும் போட்டோஷாப் கொஞ்சூண்டு தெரியும். கோரல்டிரா முன்பு பயன்படுத்தியிருக்கிறேன்
------------------
எனக்கும் மிக்க மகிழ்ச்சி நண்பரே தமிழ்நண்பர்கள் தளத்தின் முதல் பின்னூட்டமிட்ட நண்பர் தாங்கள் மிக்க மகிழ்ச்சி, நீங்கள் பார்த்திராத வித்தியாசமான, இயல்பான, இலகுவான முறையில் பாடங்களை விளக்கத்துடன் எழுத இருக்கிறேன். தொடர்ந்து ஆர்வப்படுத்துங்கள், ஊக்கப்படுத்துங்கள். தங்களின் கருத்துக்களை நிறைய எதிர் பார்க்கிறேன்.
ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சி இருக்கீங்க ..ம்..தொடருங்கள்.....!! :-)
மாஷா அல்லாஹ்...நீங்க இங்கே வந்து கருத்திட்டு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஜெய்லானி..கண்டிப்பாக தொடருவோம் இன்ஷாஅல்லாஹ்..
தொடருங்கள், இது ஒரு நல்ல , பிறருக்கு பயனுள்ள தொகுப்பாக அமையும் .
எனக்கும் கோரல் டிரா முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும்.
தங்களின் இந்த நன் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
அரியாத ஒன்றை அரிய போகிறேம் என்று ஆவலாக படித்தேன்.புரிந்தவர்களுக்கே புரியும் விதமாக விலக்க பட்டு உள்ளது போலும். முதலில் என்ன என்றும் [அடப்பு குறியில் நடைமுறை சொல்லிலும்]பிறகு எவ்வாறு தரவிறக்கம் செய்வுது என்றும்.அதன் பயன் யாது என்றும் குறிப்பிட்டால் வாயைபிளந்து கொண்டு பார்க்க வந்த என் போன்ற வர்களுக்கு பயன் படும்.
இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
முகவரி : www.valikatie.blogspot.in
இந்த வலைதளத்தில் கோரல்டிரா பாடம்
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆசிரியரும்
பிரிண்டிங் பிரஸ்ஸில் டிசைனராக வேலை
பார்ப்பார் என தெரிகின்றது. வலைதள
முகவரி : www.valikatie.blogspot.in
Post a Comment