நான்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!


என்னுடைய பெயர் காஜாமைதீன். ””(அது தெரியும்.. ம்.. அடுத்து)””””

சொந்த ஊர் திருநெல்வேலியில் மேலப்பாளையம், ””(அட நீ மேலப்பாளையத்தானா?)”” 

என் வயசு ””(டேய் உனக்கு என்ன பொண்ணா பாக்க போவுது.. மேட்டருக்கு வா)””””

இப்போ இருக்குறது அரபுநாட்டுல ”””(இதுதான்டா நீ இந்தியாக்கு செய்யுற பெரிய உதவி)”””

சொல்லிக்கிற அளவுக்கு பெருசா ஒன்னும் படிக்கல ”””(அந்த லட்சனம் நீ எழுதுனத பார்த்தாலே தெரியுது)”””

ஏதோ கம்ப்யூட்ர்ல நாலஞ்சு கோர்ஸ் பண்ணிருக்கேன் ”””(ஆமா கிழிச்சே நீ ஏன் 
 கம்ப்யூட்டர் கிளாக்கு போனேன்னு எங்களுக்கு தெரியாதா)”””” 

எனக்கு தமிழ்ன்னா உசுரு ”””(டேய் தமிழ்ன்னாவா இல்ல தமன்னாவா?)”””

வாழ்க்கைல நிறைய வேலை பார்த்தாச்சு ”””(அப்போ உருப்படாம சுத்திருக்கே)”””

சில வருடங்களாக கிராபிக்ஸ் டிசைனிங் துறையில இருக்கேன் ”””(சரி..சரி.. அப்புறம்)”””

 நான் ஏதோ சுமாரா கொஞ்சம் படம் வரைவேன் ”””(நீயே சுமாரான்னு சொல்ற பின்ன எதுக்கு அதை சொல்லிட்டு)”””  

ஏதோ கொஞ்சம் கவிதை, கதை, கட்டுரை எழுதுவேன் ”””(அப்போ அதல்லாம் இங்கே போட்டு எங்கள பாடாபடுத்தி கொல்ல போற அப்படித்தானே)”””

எனக்கு இசைல கொஞ்சம் ஆர்வம் அதிகம் அதனாலதான் இசையன்பன்னு பேர் வச்சுருக்கேன் ”””(போச்சுடா அதுவேறயா)”””

எனக்கு படம் எடுக்கனும்னு ரொம்ப ஆசை ஆர்வம் ””(தமிழ்சினிமாவ யாராலும் காப்பாத்த முடியாது)”””

என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா படம் எடுப்பேன் ”””(டேய் இதயே எத்தனை வருசன்டா சொல்றே)”””

எனக்கு கொஞ்சம் போட்டோகிராபி  மேல ஈடுபாடு அதிகம் """"(எல்லாமே அரைகுறைதானா ஏன்டா உனக்கு முழுசா ஏதாவது தெரியுமா)”””

அன்பர்களே! நண்பர்களே!! ”””(டேய் என்ன மேடையிலேயா பேசுற இவன் தொல்ல தாங்க முடியல)”””

எனது படைப்புகளுக்கு தயவுசெய்து பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகப்படுத்துங்கள் ”””(அதெல்லாம் வரும் வரும்)”””

சரி என் படைப்புகள் அனைத்தையும் பார்த்து கருத்து சொல்லுங்கள் ””””(டேய் போடா போடா காத்து வரட்டும்)””””

---------------இவண் -------------
உங்கள் அன்பு இசையன்பன்..