இதை முதலில் படிங்க
அன்பான நண்பர்களே!

தாங்கள் என் வலை தளத்திற்கு வந்தமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே!
இங்கு எனது கிறுக்கல்களை கவிதை, கட்டுரை போன்ற புனைப்பெயர்களுடன்!!! தருகிறேன். (எழுத்தாளர்கள் தயவு செய்து மன்னித்துவிடுங்கள்) மேலும் நான் ரசித்தவைகளையும் இங்கு பதியலாம் என்று இருக்கிறேன்.

நண்பர்களுக்கான பகுதி
இங்கு நண்பர்களுக்கான பகுதியில், நண்பர்களின் கவிதைகள் கதைகள் கட்டுரைகள் ஓவியங்கள் போன்ற படைப்புகளை காணலாம். 

(((புதிய நண்பர்களளுக்கு இங்கே பதிவுகள் இட வேண்டுமாயின் பதிவுகளை எனது  மின்னஞ்சல் முகவரிக்கு முழு விபரத்துடன் அனுப்பலாம்., அனுப்பிவிட்டு பொதுவான கருத்துக்கள் என்ற பொட்டியில் தெரியப்படுத்தவும்  .. முகவரி winkaja3d@gmail.com )))

இங்கே கண்ணியமான சில விதிகள் : 
  1. பெயருக்கு ஏற்றார்போல இந்த தளம் கண்ணியமாகவே இருக்கும்.

  2. கண்டிப்பாக இங்கே முழுக்க அரசியல் சம்பந்தமான விவாதங்கள்  மற்றும் கருத்துக்கள் பதிவிடப் பட மாட்டாது.

  3. கண்டிப்பாக இங்கே எந்த மதத்தையும், மதம் சார்ந்த விசயங்களையும், சாதிகளையும் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ, பதியவோ பட மாட்டாது.

  4. கிரிக்கெட், புட்பால் போன்ற விளையாட்டுக்கள் நேரத்தின் வீண் விரயம் என நான் கருதுவதால் விளையாட்டு சம்பந்தமான எந்த பதிவும் இங்கு இருக்காது.

  5. அர்த்தமில்லாமல் மொக்கை போடும் பதிவுகளும் இங்கு பதியப்பட மாட்டாது.

  6. இங்கு தமிழில் மட்டுமே பதிவுகள் இருக்கும்.

  7. கூடிய வரை நண்பர்கள் தமிழிலேயே தட்டச்சுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

  8. இது முழுக்க முழுக்க எனக்கு உதிக்கும் எண்ணங்களை பதிய அமைக்கப்பட்ட ஓர் இடமே, மேலும் நண்பர்களின் படைப்புகளுக்கு அவர்களே பொருப்பாவார்கள்...

தங்களுடைய மேன்மையான கருத்து, விமர்சனம் போன்றவைகளை பின்னூட்டங்களாக வரவேற்க ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்.


மிக்க நன்றி, நண்பர்களே!
இனிய வாழ்த்துக்களுடன், உங்கள் அன்பு நண்பன்,
இசையன்பன் (எ) காஜா மைதீன்.