13 May 2013

கேலிப் பேச்சு, அழிஞ்சுப் போச்சு..

Posted in , ,பழைய நெனப்புடா பங்காளி பழைய நெனப்புடா
----------------------------------------------------------------

கிராமப்புறங்களில் முறைவச்சு கேலிபண்றது அப்படிங்கறது எல்லாரும் ஏற்றுக் கொண்ட ஒரு அங்கிகாரமான ஒரு நடைமுறை... வயக்காட்டுல வேலை செய்யும் போதும், வீட்டுல காட்டுல வேலை செய்யும் போதும் அலுப்பு தெரியாது இருக்க மகிழ்சியாக சந்தோஷமாக ஆடிப்பாடி கேலி கிண்டல் பண்ணிகிட்டு வேலை பார்ப்பாங்க. ஆனாலும் அது வரம்பு தாண்டாமல் எதார்த்தமாக கட்டுக்கோப்பாக இருக்கும் என்பது உண்மை. 


2 comments :

காதலான என் இறைவா...

Posted in , ,

நீக்கமற நிறைந்திருக்கும் உன்னை 
நான் இதுவரை பாடியதில்லை
இன்று பாடாமல் போவதில்லை

2 comments :

12 May 2013

சிரிக்கப் பழகு...

Posted in ,"உனக்கு சிரிக்க நேரமில்லை என்றால்
நீ தவறாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்" என வைரமுத்து அவர்கள் சொன்னதாக கேள்விபட்டிருக்கிறேன்..

3 comments :

அன்னையர் தினம் நமக்கெதுக்கு..

Posted in ,


என்னவென நான் சொல்வேன்
அன்னையர் தினமுன்னு சொல்லறதை

வயித்துல கரு கொண்டு
கருவுக்கு உரு கொண்டு
திங்கள் பத்து சுமந்ததுக்கு
ஓராண்டில் ஒரு தினமா

2 comments :

06 May 2013

மேலோகத்து காவலாளியும் அறிவுரையும்..

Posted in ,


அறிவுரை சொல்றது சுலபம், சொல்றவங்களே அதுமாதிரி நடந்து காட்டறது கஷ்டம்தான். அதுக்கான ஒரு குட்டி கதை

மேலோகத்துல எல்லாரும் சொர்க்கத்துக்கு போறதுக்கு வரிசையா நின்னாங்களாம் அவங்களுக்கு முன்னாடி ஒரு பெரிய பாறை இருந்துச்சு அதுல பிடிச்சு ஏறி போறதுக்கு ஒரு கயிறு கட்டி தொங்க விட்டிருந்தாங்களாம். நிக்கறவங்களுக்கு கீழே பயங்கற சூடா எண்ணெய் கொதிச்சுட்டு இருந்திச்சாம். அந்த இடத்துல காவலாளி ஒருவா நின்னுகிட்டு இருக்கார்.. அந்த காவலாளி மக்கள்ட பாத்து சொல்றார். எப்பா எல்லாரும் நல்லா கேட்டுக்கோங்க இந்த கயிற பிடிச்சு எல்லாரும் மேல ஏறனும் பெண்கள்லாம் மொதல்ல ஏறுங்க. நல்லா கவனமா கேட்டுக்கோங்க அவங்க ஏறிகிட்டு இருக்கும் போது யாராவது மேல நிமிந்து பாத்துட்டா கீழே கொதிக்கற எண்ணையில விழுந்துவீங்க அப்படின்னு சொன்னாராம். எல்லாரும் சரின்னு தலையாட்டிட்டாங்க, பெண்களும் ஏற ஆரம்பிச்சிட்டாங்க, கொஞ்ச நேரத்துல தொம்ன்னு ஒருத்தர் எண்ணையில விழற சத்தம் கேட்டு எல்லாரும் யாருடா அது அப்படின்னு பார்த்தா இந்த விதிமுறைகளை சொன்னாரே அந்த காவலாளிதான் மேல அன்னாந்து பாத்திருக்கார் :) .. ஆக மத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது பெரிய விஷயமில்லை மொதல்ல சொல்றவங்க அது போல நடக்கனும்...

-------------------------------------
கதை : நன்றி மதுரை முத்து (எப்பவோ கேட்டது)

2 comments :

05 May 2013

நிலவும், மனிதர்களின் தோற்றமும்.

Posted in ,


சிலரின் தோன்றங்களையும் செயல்பாடுகளையும் வைத்து அவர்களை நாம் உயரியவர்கள் என எண்ணி விடுவதுண்டு, உண்மையில் அவாகள் சில சமயம் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம், யாரையும் வெளித் தோற்றத்தினை வைத்து எடை போடக்கூடாது, 

2 comments :

04 May 2013

என்னவளுக்கு ஓர் கடிதம்

Posted in , ,

ஒத்தயில நிக்கயில ஊருசனம் பார்க்கயில
அத்தனையும் விட்டுபுட்டு என் உறவாய் வந்தவளே

பந்தக்காலு நட்டு வச்சு பந்திச் சோறு போட்டு விட்டு
பக்குவமாய் நுழைஞ்சவளே பத்தமடை பெற்றவளே

2 comments :

முக்காடில் முழு நிலவு..

Posted in ,

முக்காடில் பாதி தெரிந்த உன் முகம்
முகில்களில் பாதி மறைந்த நிலவாய் தெரிந்தது

கண்களால் கவிதை சொன்னாய் 
காதலாய் ஓவியம் தீட்டினேன் நான் 

0 comments :

கற்சிலையும் இனிய வாழ்வும்..

Posted in ,


மிகப் பெரியதாய் உயர்ந்து நிற்கிற பாறை என்பது மலை, அதை ஒரு துண்டாக வெட்டி எடுத்ததும் கருங்கல், அதை உளியால் தேவையில்லாதவைகளை உடைத்து சிதைத்தால் கிடைப்பது சிலை.

0 comments :

ஆறும் வாழ்க்கையும், கடலும் மரணமும்..

Posted in ,


மலையின் உச்சியில் ஊற்று எடுத்து அருவியாய் விழுந்து ஆறாய் ஓடி கடலில் கலக்கிறது ஆறு. 

ஆற்றின் பாதையை நம்முடைய வாழ்க்கை காலம் அப்படின்னு எடுத்துக் கொள்வோம் அதில் ஓடுகின்ற நீர் நாம் வாழும் வாழ்க்கை என எடுத்துக் கொள்வோம்.. 

0 comments :

03 May 2013

இதயக் கதவுகள். 4

Posted in , ,


உன்னுடனே...

வெட்ட வெளி விண்ணின் மையிருட்டு வேளை
தெளிந்த வெளிர் பால் நிலாவென உன் முகம்தனை
கண்டு களித்துக் கொண்டே இருக்கிறது என் மனது

0 comments :

இசை அரக்கன் இளையராசா.

Posted in ,இசை என்பதில் எல்லாருக்கும் ஒரு இனம் புரியாத தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது. சிலருக்கு அந்த தாக்கம் காதலாக, மோகமாக ஏன் வெறியாக கூட மாறி இருக்கும் இப்படி இசையை வெறியாக மாற்றியவர்களில் நானும் ஒருவன். அதற்கு முக்கிய காரணம் ஒரு அரக்கன், ஆம் அரக்கனேதான் சாதாரண அரக்கன் இல்லை நம்முடைய மனங்களை இசையென்னும் ஒரு கடலில் தன்னந்தனியாக தத்தளிக்க வைத்து விட்டு ஒன்றும் தெரியாததுபோல் கை கட்டி கரையில் நின்று வேடிக்கை பார்க்கும் மிக மோசமான ஒரு அரக்கன், அவன் இளையராஜா என்ற பெயரில் இசையமைக்கும் அரக்கன்.. 

2 comments :

இதயக் கதவுகள். 3

Posted in , ,


குளிர் பார்வை

எங்கிருந்தோ வந்த பனிக்காற்றாய்
என் முகத்தில் மோதுகிறது
உன் குளிர் பார்வை.

நிலைகொள்ளாமல்
உருண்டு கொண்டே இருக்கும்
அக் கருவிழிக் கோளங்கள்
எனை நிலை தடுமாறச் செய்கின்றது.

2 comments :

02 May 2013

இதயக் கதவுகள். 2

Posted in , ,
அன்பே தந்துவிடு


கார்மேகம் பொழியும்
இடைவிடாத அடை மழையில்
உன் இடை உடையாய்
நான் இருக்க கனா காண்கிறேன்,

2 comments :