11 January 2012

Posted in

மாராப்பு சரிகிறது.....

வெண்பஞ்சு மேகக்குடையின் கீழ்
தென்றல் தேவதைகள் சாமரம் வீச
பசுமை வர்ணப் பட்டுப் போர்த்தி


சுகமாய் உறங்கி கிடக்கும் மலைமகள்
மார்பினூடே நழுவிய மாராப்பாய்
துள்ளி விழுகிறது வெள்ளி அருவி


சுகமான சப்தத்துடன் கற்கள் மீது
மோகம் கொண்டு காதல் செய்ய
கீழே பாய்கிறது ஆர்ப்பாட்டத்துடன்


ஆனந்த சயனத்தில் இருக்கும் கன்னியே.!
கதிர் உன் மேனியை வெளிச்சம் போடும் முன்
எழுந்து காத்திடு,  மேலாடை போர்த்திடு


இதோ மேலாடையில்லா உன் அழகைக் காண
சந்திரன் வந்துகொண்டு இருக்கிறான்
திருட்டுத்தனமாக..

--------------------------------------------------------
-------உங்கள் அன்பு இசையன்பன்---------

0 comments :

மூன்றாம் விதி..

Posted in ,என் காதருகே உன் மூச்சுக்காற்றினை
நீ இரைத்துக் கொண்டிருந்த நேரம்
உன் இடையில் பதிந்த என் கைரேகையை
நான் தேடிக் கொண்டிருந்தேன்.

0 comments :

காதல் போதை..

Posted in ,கன்னியிவள் பார்வை கொள்ள
கண்கள் ரெண்டும் போதை கொண்டு
ஆடும் என்னோடு மெல்லத்தான்

நித்தம் இதழ் காதல் சொல்ல
முத்தம் பட்டு தேகம் எங்கும்
ஓடும் தேனாறு துள்ளித்தான்

0 comments :

விலை மாதர்கள்..

Posted in ,வசந்த இதழ் விரித்து
வண்டுண்ண உடல் கொடுக்கும்
வாசமில்லா வாடகை மலர்கள்

கண்கவர் இறகு முளைத்து
காசுக்கு கவர்ந்திழுக்கும்
வர்ணமில்லா வண்ணத்துப்பூச்சிகள்

0 comments :

காதல் தேடி...

Posted in ,


மஞ்சத்தில் கதிர் உறங்கும் நேரத்தின்
மஞ்சள் பூசி மிளிரும் வானம்
மேனியைத் தழுவும் தென்றல்
மோகமூட்டும் பச்சைப் புல் வெளி

0 comments :

இழப்பு...

Posted in ,


மழை தன்னை தீண்டும் உணர்வில் நாணி
மேகத்திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்ட நெடுவானம்

அதிகாலை வேளையில் நேரந்தவறாமல்
காலக்கணக்கோடு காத்திருந்து கூவும் கடமைதவறா சேவல்

0 comments :

Posted in

தவமலர்....

நித்தம் ஞாயிறு தேடி வந்து
நிலை மகிழ்ந்து நீந்தி விளையாடிச்
செல்லும் பளிங்கு தெப்பத்தில்
செந்நிற சாந்தாய் மேனி விளங்கி

கன்னி எழில் மொட்டாய் பூத்து நிற்கும்
கமலத்தில் வழியறியாதென பொய்யென
கலங்கி ரீங்கரித்து மேனியில்
தஞ்சம் புகுந்த கார்வண்டு. 

மேனிதழுவி மயங்கிய நேரத்தில் காதோரம்
மோகமாய் காதலுரைத்து மொட்டின் கட்டவிழ்த்து
சதி செய்து இதழ் சுவைத்து இன்பம் கொடுத்து
செந்தேன் அருந்தி சுவைபெற்று களவி கொண்டதும்

பற்றிய கரங்களையும் சொக்கிய விழிகளையும்
தாங்கிய தேகத்தையும் உதறிவிட்டு
காற்றில் வந்த சேதி கண்டு
பறந்து சென்றது கார்வண்டு என்று.

நெஞ்சம் கொதித்து கண்கள் சிவந்து
அவனை தனக்கே அடைய வேண்டித்தான்
மேனி வருத்தி யாருடனும் உற்ற நீருடனும்
ஒட்டாது ஓயாமல் ஒற்றைக்காலில்
தவம் செய்கிறாயோ மலர்தாமரையே...

----------------------------------------------------
-----உங்கள் அன்பு இசையன்பன்---------

0 comments :

வாராயோ காதல் சொல்ல..

Posted in ,


நீலம் கொண்ட வானிலே - என்
காதலி வருவாளோ
வானம் கொண்ட நீலமாய் - அவள்
காதலைச் சொல்வாளோ.

0 comments :