11 May 2012

காதல் காதல் மட்டும்....

Posted in ,புல்லாங்குழல் ராகம் இசைக்கின்றது
பெண் மான் மயில் தேகம் அசைக்கின்றது
விண்ணோடு மண்சேர்ந்து கலக்கின்றது
தண்ணீரும் தேனாக சுவைக்கின்றது

1 comments :

விதியின் சதியில்...

Posted in ,

  


நித்திம் நித்தம் நினைவிலே
நாட்கள் போனது
நெருப்பிலே நிற்கும் நொடி
வாழ்க்கையானது
எண்ணி எண்ணி கனவிலே
காலம் போனது 
கருவிலே என்தன் காதல்
கலைந்துபோனது

2 comments :

காயங்கள் ஆறாதோ...

Posted in ,காலம் செய்த காயம்
மனமெங்கும் பரவி கிடக்க - அதை
கொத்தும் கழுகாய் சில நினைவுகள்

ஏனோ என்ற கேள்வி
ஆயிரங்கள் மனதில் இருக்க - எனை
தேற்றும் பதிலாய் பல கேள்விகள்

0 comments :

20 April 2012

காத்திருப்பு (நித்யஸ்ரீ)

Posted in , , ,காற்றை நான் தூது விட்டேன்
என் கண்ணாளனே
பதிலும் நீ சொல்வாயோ ?

தென்றல் என்னைத் தீண்டி
உன் சேதி சொல்லவே
நான் காத்திருந்தேன்
அந்தி சாயும் மாலைப் பொழுதில்

1 comments :

ஏக்கம்...! (நித்யஸ்ரீ)

Posted in , , ,


வருவாயா நீ வருவாயா?

வானில் தேயும் நிலவாய் அல்ல - என்
விழிகளில் இருக்கும் கருவாய்..
மண்ணில் விழும் விதையாய் அல்ல - என்
மனதில் எழும் எண்ணங்களாய்..

0 comments :

மன்னவனே....! (நித்யஸ்ரீ)

Posted in , , ,


முத்து முத்தாய் உன் நினைவுகள்
முத்தாய்ப்பாய் என் கனவினிலே...!
முத்தாய் என் வியர்வையிலே
முத்தாய்க்கும் உன் வாசனை...!

0 comments :

சுகமாய் உறங்கு. (நித்யஸ்ரீ)

Posted in , , ,


இரவை உனக்காய் பரிசளித்தேன்
நீ சுகமாய் உறங்கிட

கனவை உனக்காய் பரிசளித்தேன்
கனவிலும் நானுனை களவு கொண்டிட

0 comments :

27 February 2012

பொம்மைப் பூக்கள்.. (நித்யஸ்ரீ)

Posted in , , ,
மனிதப் பிறவியிலேயே நீங்களோர்
உன்னத பிறவியம்மா

மனித முகமணிந்து மிருககுணம் கொண்டு
வாழும் மனிதர்களிடையே

ஆணாக உருவெடுத்து பெண்ணாக
வாழும் தெய்வப் பிறவியம்மா…
தண்ணீரை விடுத்து பாலை பருகும்
அன்னப்பறவைப் போல்

0 comments :

23 February 2012

உருகும் நிழல். (நித்யஸ்ரீ)

Posted in , , ,
ஏதோ சொல்லிச் சென்றான் - அவன்

என்னிதயத்தில் காதல் என்ற மூன்றெழுத்தில்...இன்றும் என்னை ரணமாய்க்
கொல்கிறது அவனின் நினைவுகள்..... ?

3 comments :

பிரியா நட்பு (நித்யஸ்ரீ)

Posted in , , ,அந்த காம்பெளண்ட் அதிகாலையில் மங்களகரமாக இருந்தது. வனிதாவும், சுதாவும் கோலமிட்டுக் கொண்டிருந்தனர். அந்த வீட்டுக்கு வந்த நான்கு வருடங்களில் இருவரும் இணைபிரியா தோழிகள் அந்த நட்பு அவர்களின் குடும்பத்தினைரையும் பிணைத்து விட்டிருந்தது. 

1 comments :

22 February 2012

கண்ணனைத் தேடும் ராதை (நித்யஸ்ரீ)

Posted in , , ,கோபியர்கள் கொஞ்சிடும் கண்ணன் - இவன்
என் மனத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்..!

வானுலகிலும் பூவுலகிலும் தேவன் - இவன்
என் இதயத்தை திருடிச் சென்ற திருடன்..!

0 comments :

21 February 2012

பூமரம் (நித்யஸ்ரீ)

Posted in , , ,


                  காலை வேலையில் பரபரப்பாக அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த தன் மகனிடம் சென்று லட்சுமியம்மாள் ஏம்பா சிவா சாயங்காலம் வரும் போது இந்த மருந்து கொஞ்சம் வாங்கிட்டு வர்றீயா ? ரெண்டு நாளா ஒரே இருமலா இருக்கு.

2 comments :

11 January 2012

Posted in

மாராப்பு சரிகிறது.....

வெண்பஞ்சு மேகக்குடையின் கீழ்
தென்றல் தேவதைகள் சாமரம் வீச
பசுமை வர்ணப் பட்டுப் போர்த்தி


சுகமாய் உறங்கி கிடக்கும் மலைமகள்
மார்பினூடே நழுவிய மாராப்பாய்
துள்ளி விழுகிறது வெள்ளி அருவி


சுகமான சப்தத்துடன் கற்கள் மீது
மோகம் கொண்டு காதல் செய்ய
கீழே பாய்கிறது ஆர்ப்பாட்டத்துடன்


ஆனந்த சயனத்தில் இருக்கும் கன்னியே.!
கதிர் உன் மேனியை வெளிச்சம் போடும் முன்
எழுந்து காத்திடு,  மேலாடை போர்த்திடு


இதோ மேலாடையில்லா உன் அழகைக் காண
சந்திரன் வந்துகொண்டு இருக்கிறான்
திருட்டுத்தனமாக..

--------------------------------------------------------
-------உங்கள் அன்பு இசையன்பன்---------

0 comments :

மூன்றாம் விதி..

Posted in ,என் காதருகே உன் மூச்சுக்காற்றினை
நீ இரைத்துக் கொண்டிருந்த நேரம்
உன் இடையில் பதிந்த என் கைரேகையை
நான் தேடிக் கொண்டிருந்தேன்.

0 comments :

காதல் போதை..

Posted in ,கன்னியிவள் பார்வை கொள்ள
கண்கள் ரெண்டும் போதை கொண்டு
ஆடும் என்னோடு மெல்லத்தான்

நித்தம் இதழ் காதல் சொல்ல
முத்தம் பட்டு தேகம் எங்கும்
ஓடும் தேனாறு துள்ளித்தான்

0 comments :

விலை மாதர்கள்..

Posted in ,வசந்த இதழ் விரித்து
வண்டுண்ண உடல் கொடுக்கும்
வாசமில்லா வாடகை மலர்கள்

கண்கவர் இறகு முளைத்து
காசுக்கு கவர்ந்திழுக்கும்
வர்ணமில்லா வண்ணத்துப்பூச்சிகள்

0 comments :

காதல் தேடி...

Posted in ,


மஞ்சத்தில் கதிர் உறங்கும் நேரத்தின்
மஞ்சள் பூசி மிளிரும் வானம்
மேனியைத் தழுவும் தென்றல்
மோகமூட்டும் பச்சைப் புல் வெளி

0 comments :

இழப்பு...

Posted in ,


மழை தன்னை தீண்டும் உணர்வில் நாணி
மேகத்திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்ட நெடுவானம்

அதிகாலை வேளையில் நேரந்தவறாமல்
காலக்கணக்கோடு காத்திருந்து கூவும் கடமைதவறா சேவல்

0 comments :

Posted in

தவமலர்....

நித்தம் ஞாயிறு தேடி வந்து
நிலை மகிழ்ந்து நீந்தி விளையாடிச்
செல்லும் பளிங்கு தெப்பத்தில்
செந்நிற சாந்தாய் மேனி விளங்கி

கன்னி எழில் மொட்டாய் பூத்து நிற்கும்
கமலத்தில் வழியறியாதென பொய்யென
கலங்கி ரீங்கரித்து மேனியில்
தஞ்சம் புகுந்த கார்வண்டு. 

மேனிதழுவி மயங்கிய நேரத்தில் காதோரம்
மோகமாய் காதலுரைத்து மொட்டின் கட்டவிழ்த்து
சதி செய்து இதழ் சுவைத்து இன்பம் கொடுத்து
செந்தேன் அருந்தி சுவைபெற்று களவி கொண்டதும்

பற்றிய கரங்களையும் சொக்கிய விழிகளையும்
தாங்கிய தேகத்தையும் உதறிவிட்டு
காற்றில் வந்த சேதி கண்டு
பறந்து சென்றது கார்வண்டு என்று.

நெஞ்சம் கொதித்து கண்கள் சிவந்து
அவனை தனக்கே அடைய வேண்டித்தான்
மேனி வருத்தி யாருடனும் உற்ற நீருடனும்
ஒட்டாது ஓயாமல் ஒற்றைக்காலில்
தவம் செய்கிறாயோ மலர்தாமரையே...

----------------------------------------------------
-----உங்கள் அன்பு இசையன்பன்---------

0 comments :

வாராயோ காதல் சொல்ல..

Posted in ,


நீலம் கொண்ட வானிலே - என்
காதலி வருவாளோ
வானம் கொண்ட நீலமாய் - அவள்
காதலைச் சொல்வாளோ.

0 comments :